அம்பாறை - காஞ்சிரங்குடா பகுதியில் மாணவர்களை தொடர்ச்சியாக பேருந்துகள் ஏற்றாமல் செல்கின்றன. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிரங்குடா பகுதியில் உள்ள மாணவர்களை பேருந்துகள் தொடர்ச்சியாக ஏற்றிச் செல்லாது செல்வதாக பல முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன.
அதனையடுத்து திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இன்று (23) காலை 6.00 மணிக்கு குறித்த பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்தனர். எனினும் மாணவர்களை ஏற்றாது அவர்களைத் தாண்டி பேருந்து சென்றுள்ளது.
இதனை தவிசாளர் அவதானித்து உடனே பேருந்தை நிறுத்தி ஏன் மாணவர்களை ஏற்றாது செல்கின்றீர்கள் என்றவாறு வினவினார். அதனைத் தொடர்ந்து அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.
இவ்வாறே தொடர்ச்சியாக மாணவர்களை ஏற்றாமல் பேருந்து செல்வதாக அங்குநின்ற பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மாணவர்களை ஏற்றாமல் சென்ற குறித்த பகுதியில் நாளை முதல் பேருந்தை செலுத்த விடமாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தவிசாளரிடம் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களை தொடர்ச்சியாக ஏற்றாமல் செல்லும் பேருந்துகள்; உரிய நடவடிக்கை எடுங்கள்- பெற்றோர் கோரிக்கை அம்பாறை - காஞ்சிரங்குடா பகுதியில் மாணவர்களை தொடர்ச்சியாக பேருந்துகள் ஏற்றாமல் செல்கின்றன. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிரங்குடா பகுதியில் உள்ள மாணவர்களை பேருந்துகள் தொடர்ச்சியாக ஏற்றிச் செல்லாது செல்வதாக பல முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. அதனையடுத்து திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இன்று (23) காலை 6.00 மணிக்கு குறித்த பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக பேருந்திற்காக காத்திருந்தனர். எனினும் மாணவர்களை ஏற்றாது அவர்களைத் தாண்டி பேருந்து சென்றுள்ளது. இதனை தவிசாளர் அவதானித்து உடனே பேருந்தை நிறுத்தி ஏன் மாணவர்களை ஏற்றாது செல்கின்றீர்கள் என்றவாறு வினவினார். அதனைத் தொடர்ந்து அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. இவ்வாறே தொடர்ச்சியாக மாணவர்களை ஏற்றாமல் பேருந்து செல்வதாக அங்குநின்ற பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மாணவர்களை ஏற்றாமல் சென்ற குறித்த பகுதியில் நாளை முதல் பேருந்தை செலுத்த விடமாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தவிசாளரிடம் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.