• Aug 13 2025

பஸ் தரிப்பிடத்தை சுவருடன் ஒட்டவைத்த பேருந்து; சிக்கியவர் சிதறல் - பதறவைக்கும் சிசிரிவி காட்சி!

shanuja / Aug 12th 2025, 5:07 pm
image

தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து பேருந்து தரிப்பிடத்தை மோதித் தள்ளிய காட்சி வெளியாகி பதறவைத்துள்ளது. 


இந்த விபத்துச் சம்பவம் கொழும்பு - புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட N.H.M. அப்துல் காதர் வீதியில் இன்று இடம்பெற்றுள்ளது. 


விபத்துத் தொடர்பில் தெரிய வருகையில், 


புறக்கோட்டை வீதி வழியாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து அங்கிருந்த பேருந்து தரிப்பிடத்தை அடித்து நொருக்கியது. 


இதன்போது குறித்த பேருந்து தரிப்பிடத்தில் பேருந்திற்காக ஒருவர் காத்துக்கொண்டிருந்தார். தரிப்பிடத்தில் நின்ற நபரையும் பேருந்து மோதித் தள்ளியது. 


விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


அத்துடன் பேருந்து மோதித் தள்ளியதில் பேருந்து தரிப்பிடம் முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பேருந்து வேகக் கட்டுப்பாட்டையிழந்து தரிப்பிடத்தை அடித்து நொருக்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஸ் தரிப்பிடத்தை சுவருடன் ஒட்டவைத்த பேருந்து; சிக்கியவர் சிதறல் - பதறவைக்கும் சிசிரிவி காட்சி தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து பேருந்து தரிப்பிடத்தை மோதித் தள்ளிய காட்சி வெளியாகி பதறவைத்துள்ளது. இந்த விபத்துச் சம்பவம் கொழும்பு - புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட N.H.M. அப்துல் காதர் வீதியில் இன்று இடம்பெற்றுள்ளது. விபத்துத் தொடர்பில் தெரிய வருகையில், புறக்கோட்டை வீதி வழியாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து அங்கிருந்த பேருந்து தரிப்பிடத்தை அடித்து நொருக்கியது. இதன்போது குறித்த பேருந்து தரிப்பிடத்தில் பேருந்திற்காக ஒருவர் காத்துக்கொண்டிருந்தார். தரிப்பிடத்தில் நின்ற நபரையும் பேருந்து மோதித் தள்ளியது. விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பேருந்து மோதித் தள்ளியதில் பேருந்து தரிப்பிடம் முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து வேகக் கட்டுப்பாட்டையிழந்து தரிப்பிடத்தை அடித்து நொருக்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement