• May 23 2026

பயணியின் உயிரைக்காக்க ஓடிச் சென்ற பேருந்து; சாரதியின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!

Bus
shanu / Sep 16th 2025, 4:26 pm
image

திடீர் சுகவீனமடைந்த பயணி ஒருவரை பேருந்தில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற சம்பவம் அனைவரையும நெகிழ வைத்துள்ளது.  


கொழும்பு குருநாகல் பகுதிகளுக்கிடையில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளார். 


சுகவீனமடைந்த பயணியைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக செயற்பட்ட சாரதி, பேருந்தை அருகிலுள்ள வைத்தியசாலைக்குத் திருப்பியுள்ளார். 


சுகவீனமடைந்த பயணியை பேருந்திலேயே வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று வைத்தியசாலையின் வாசலில் நிறுத்தியுள்ளார். 


பின்னர் வைத்தியசாலை ஊழியர்களை அழைத்து சுகவீனமடைந்த பயணியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். 


பயணத்தின் போது சுகவீனமடைந்த பயணியின் உயிரைக் காப்பது தன் கடமையாக எண்ணி வரைந்து செயற்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். 


பேருந்தில் பயணியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற காட்சி காணொளியாக வெளிவந்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 


காணொளிப் பதிவைப் பார்வையிட்ட பலரும் பேருந்து சாரதியின் மனிதாபிமானத்தையும்  நெகிழ்ச்சிச் செயலையும் பாராட்டி வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

பயணியின் உயிரைக்காக்க ஓடிச் சென்ற பேருந்து; சாரதியின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள் திடீர் சுகவீனமடைந்த பயணி ஒருவரை பேருந்தில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற சம்பவம் அனைவரையும நெகிழ வைத்துள்ளது.  கொழும்பு குருநாகல் பகுதிகளுக்கிடையில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளார். சுகவீனமடைந்த பயணியைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக செயற்பட்ட சாரதி, பேருந்தை அருகிலுள்ள வைத்தியசாலைக்குத் திருப்பியுள்ளார். சுகவீனமடைந்த பயணியை பேருந்திலேயே வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று வைத்தியசாலையின் வாசலில் நிறுத்தியுள்ளார். பின்னர் வைத்தியசாலை ஊழியர்களை அழைத்து சுகவீனமடைந்த பயணியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். பயணத்தின் போது சுகவீனமடைந்த பயணியின் உயிரைக் காப்பது தன் கடமையாக எண்ணி வரைந்து செயற்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பேருந்தில் பயணியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற காட்சி காணொளியாக வெளிவந்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. காணொளிப் பதிவைப் பார்வையிட்ட பலரும் பேருந்து சாரதியின் மனிதாபிமானத்தையும்  நெகிழ்ச்சிச் செயலையும் பாராட்டி வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement