• Aug 17 2025

மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய பேருந்து; சம்பவ இடத்தில் கிராம அலுவலர் பலி!

shanuja / Aug 16th 2025, 6:15 pm
image

மோட்டார் சைக்கிளை பேருந்து மோதித் தள்ளியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இந்த விபத்துச் சம்பவம் மாத்தளை - கைகாவல பகுதியில் இடம்பெற்றுள்ளது.


குறித்த பகுதி வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை அதே வீதியில் வந்த தனியார் பேருந்து ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. 


விபத்தில் மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கிராம உத்தியோகத்தர்  ஒருவரே உயிரிழந்தவராவார்.


மோட்டார் சைக்கிளில் தொழிலுக்குச் சென்ற வேளையிலேயே விபத்தில் சிக்கி  சம்பவ இடத்திலேயே கிராம உத்தியோகத்தர் உயிரிழந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சம்பவத்தையடுத்து பேருந்து சாரதி கைது செய்யப்பட்டதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை  ரத்தோட்டை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய பேருந்து; சம்பவ இடத்தில் கிராம அலுவலர் பலி மோட்டார் சைக்கிளை பேருந்து மோதித் தள்ளியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் மாத்தளை - கைகாவல பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதி வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை அதே வீதியில் வந்த தனியார் பேருந்து ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கிராம உத்தியோகத்தர்  ஒருவரே உயிரிழந்தவராவார்.மோட்டார் சைக்கிளில் தொழிலுக்குச் சென்ற வேளையிலேயே விபத்தில் சிக்கி  சம்பவ இடத்திலேயே கிராம உத்தியோகத்தர் உயிரிழந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து பேருந்து சாரதி கைது செய்யப்பட்டதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை  ரத்தோட்டை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement