மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து புனானையில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (18) காலை மட்டக்களப்பு வாழைச்சேனை புனானை பகுதியில் இவ் விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
காத்தான்குடியிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த பேருந்தும் பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும் புனானை பகுதில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இப் பகுதியில் மழையுடனான வானிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து; மட்டக்களப்பில் அதிகாலையில் சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து புனானையில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லையென தெரிவிக்கப்படுகின்றது.இன்று (18) காலை மட்டக்களப்பு வாழைச்சேனை புனானை பகுதியில் இவ் விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.காத்தான்குடியிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த பேருந்தும் பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும் புனானை பகுதில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.இப் பகுதியில் மழையுடனான வானிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.