• Jun 16 2026

மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு!

shanu / Jun 15th 2026, 7:17 pm
image

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது நில உரிமையினை பாதுகாப்பதற்காக முன்னெடுத்துவரும் அறவழி போராட்டத்தின் 1000ஆவது நாளை முன்னிட்டு மயிலத்தமடு,மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று(15-06) நடைபெற்றது. 


எமக்கான நிலம் கிடைக்கப் பெறும் வரையில் நாம் தொடர்ந்து போராடுவோம். மகாவலி எம்மைப் பயன்படுத்த முடியாது, நாம் மகாவலிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நமக்கு என்று வடக்கு-கிழக்கிலே எமக்கான நில உரிமை இருக்கிறது. 


இந்த மண்ணினுடைய மைந்தர்கள் நாங்கள். எங்கிருந்தோ வந்தவர்கள், உங்களுக்கு நாங்கள் இவ்வளவுதான் தருவோம் என்று சொல்லி எங்களுடைய பண்ணையாளர்களை ஏமாற்ற முடியாது என சிவில் சமூக செயற்பாட்டாளரும் மனித உரிமை ஆர்வலருமான அருட்தந்தை லூக் ஜோன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது நில உரிமையினை பாதுகாப்பதற்காக முன்னெடுத்துவரும் அறவழி போராட்டத்தின் 1000ஆவது நாளை முன்னிட்டு மயிலத்தமடு,மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று(15-06) நடைபெற்றது.


எழுநாவினால் எழுத்தாளர் வை.ஜெயமுருகன் எழுதிய மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை நில அடையாளம், இன அடையாளம்,வாழ்வாதாரம் என்னும் தலைப்பில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம் சித்தாண்டியில் உள்ள போராட்டம் நடைபெறும் இடத்தில் மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் குருநாதன்,அருட்தந்தை லுக்,சட்டத்தரணி ஜெயசிங்கம்,சிவில்சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன்,மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் சங்க தலைவி அ.அமலநாயகி,எழுநா அமைப்பின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சார்ள்ஸ் அன்டனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது நூல் வெளியீட்டை செய்வதற்கு உறுதுணையாக இருந்த சார்ள்ஸ் அன்ரனியினால் நூல் வெளியீடுசெய்துவைக்கப்பட்டது.இதன்போது பல்வேறு உரைகளும் இடம்பெற்றன.


மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது நில உரிமையினை பாதுகாப்பதற்காக முன்னெடுத்துவரும் அறவழி போராட்டத்தின் 1000ஆவது நாளை கடந்துள்ள நிலையில் தமது கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


குறிப்பாக மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக 1570 ஏக்கர் காணிகளை வழங்குமாறு அறிவுறுத்தியிருந்த நிலையில் அதனை உhயி திணைக்களங்கள் இதுவரையில் நிறைவேற்றவில்லையெனவும் அவற்றினை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.


இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை லூக் ஜோன், கடந்த மாதம் 12 ஆம் திகதி அவர்களை அழைத்து உரையாடினார்கள். காரணம் என்னவென்றால், அதனைத் தொடர்ந்து வந்த வாரங்களிலே ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ள இருந்தார்.


எனவே, அரசுக்குத் தெரியும் இங்கே ஜனாதிபதி வருகிறபொழுது நிச்சயமாக இவர்கள் போராட்டம் செய்வார்கள். எனவே, ஒரு 1,570 ஏக்கரை கொடுத்துவிட்டால் அன்று போராட்டம் நடைபெறாது, ஜனாதிபதியினுடைய வருகை சுமுகமாக இருக்கும் என்று எண்ணி இவர்களோடு பேசினார்கள்.


எங்களுடைய பண்ணையாளர்களும் ஒரு வகையில் அதை நம்பினார்கள். எனவேதான், ஜனாதிபதியை வரவேற்கிறோம் என்று சொல்லி ஒரு பதாகையைக் (டீயnநெச) கட்டினார்கள்.


ஆனால், ஜனாதிபதி ஹெலிகாப்டர் (உலங்கு வானூர்தி) மூலமாக வந்து போய்விட்டார். சொல்லப்பட்டது... நாங்கள் போராட்டமும் செய்யவில்லை, தருவதாகச் சொல்லப்பட்ட நிலமும் தரவில்லை. இரண்டாவது முறையாகத் தெரியும், இது ஆயிரம் நாளை எட்டுகிறது. 


நிச்சயமாக மாவட்டத் தலைவர்கள் ரீதியில் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சொன்னபொழுது, எண்ணம் இருந்தபொழுது, அரசுக்கு அந்தப் பயம் இருந்தபொழுது, அவர்கள் சொன்னார்கள் "நாங்கள் உங்களுக்கான 1,570 ஏக்கரை கெசட் (வர்த்தமானி) பண்ணுவோம்". எப்ப பண்ணுவோம்? 12 ஆம் திகதி ஆயிரம் நாள், நாங்கள் 10 ஆம் திகதி வாக்குல கெசட் பண்ணுவோம் என்று சொன்னார்கள்.


நாங்கள் நம்பினோம். ஆயிரம் நாள் மிகப்பெரிய போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவில்லை. நாங்கள் அமைதியாகக் காத்திருந்தோம். அதுவும் திட்டமிட்ட வகையிலேயே ஏமாற்றப்பட்டது. ஏன்னா, இன்று இப்பொழுது வரை... 15 ஆம் திகதி இன்று வரை அந்த கெசட் பண்ணப்படவில்லை.


எனவே, ஏற்கனவே உரையாளர்கள் சொன்னது போல, இந்த மயிலாத்தமடு - பெரியமாதவனைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாங்கள் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையிலே ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகிறோம்.

எங்களுக்குத் தெரியும் நாங்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டு வருகிறோம் என்பது. நாம் ஏமாற்ற... எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதிலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆனால், அரசும் அரசோடு இணைந்த சில சக்திகளும் தாம் இதில் வெற்றிகண்டுவிட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால், நிச்சயமாக இல்லை.

இந்தப் போராட்டம் ஏற்கனவே பலர் பேசியது போல, எமக்கான நிலம் கிடைக்கும் வரையில் இந்தப் போராட்டம் தொடர வேண்டும், தொடரப்பட வேண்டும். இதற்கு இந்த மாவட்டத்தினுடைய மதக் குருக்களாக, சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாக நாங்கள் எப்பொழுதும் உடன் இருப்போம்.


ஏன் நாங்கள் இந்தப் போராட்டங்களிலே பங்குபெற வேண்டும்? நான் ஒரு பண்ணையாளரா? இல்லையே. எனக்கு மாடுகள் இருக்கிறதா? இல்லையே. அல்லது எனக்கு நூற்றுக்கணக்கான மாடுகள், கால்நடைகள் இல்லையே. ஏன் நானும் இதிலே பங்குபெற வேண்டும் என்றால், இது வெறுமனே மயிலாத்தமடு - பெரியமாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. அல்லது இங்கிருக்கிற சங்கங்களின் பிரச்சினை மாத்திரமல்ல. அல்லது கால்நடைகள் வைத்திருப்பாரின் பிரச்சினை மாத்திரமல்ல. இது ஒரு மாவட்டத்தின் பிரச்சினை.


இது கிழக்கு மாகாணத்தின் பிரச்சினை. இது வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் தீராத ஒரு பிரச்சினையாக இருக்கிறது. எனவேதான், நான் பண்ணையாளரோ இல்லையோ, இது வடக்கு-கிழக்கு மக்களுடைய ஒரு தமிழ்த் தேசியப் பிரச்சினையாக இருக்கிறபடியினால், விரும்பியோ விரும்பாமலோ இந்த நிலப் பிரச்சினையில், இந்த எல்லைப் பிரச்சினையில் நாங்களும் இணைந்து போராட வேண்டிய தேவை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இருக்கிறது.


யுத்தத்திற்குப் பின்னதான வடக்கு-கிழக்கிலே நிலத்தைப் பாதுகாக்கின்ற பணியிலே மனிதர்கள் மாத்திரமல்ல, விலங்குகளும் பங்களிப்புச் செய்கின்றன.

பறவைகள் சரணாலயங்களாக, கால்நடைகள் மேய்ச்சல் நிலங்களாக... கால்நடைகள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கின்றன. 


எனவே, நாம் இலகுவாகச் சொல்லிவிட முடியாது "எங்களுக்கு நாங்கள் பால் உற்பத்திதானே, நாங்கள் 1 ½ லீட்டர் பால் கறக்கிற மாட்டை ஏன் வைத்திருக்க? நாங்கள் இந்தியாவிலிருந்து, பாகிஸ்தானிலிருந்து நல்ல ஜெர்சி (துநசளநல) மாடுகளைக் கொண்டு வந்தால் ஒரு மாடு 10 லீட்டர், 15 லீட்டர் கறக்கும்தானே" என்று நாங்கள் இலகுவாகச் சொல்லிவிட்டுப் போக முடியாது. ஏனென்றால், நீங்கள் சொல்வது போல உண்மைதான், அந்த மாடுகள் வந்தால் கணக்கா பால் கறக்கும்.

நான் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன், அது மாடே இல்லை! அது பால் கறக்கும் ஒரு விலங்கு. அது மாடே இல்லை. இன்று நீங்கள் குடிக்கிற இந்தப் பாலின் சுவை, அந்த மாட்டில் வருகிற சுவையாக இருக்காது.


அது எல்லாமே இயற்கை... அது உண்ணுவது இயற்கை, அதைப் பராமரிப்பது இயற்கை, செயற்கை செயற்கை, மன்னிக்கவும் செயற்கை. உண்ணுவது செயற்கை, பராமரிக்கப்படுகின்ற விதம் செயற்கை, அது கர்ப்பம் தரிக்கும் விதம் செயற்கை, எல்லாமே செயற்கை. எனவே, அந்தப் பாலும் செயற்கை. சரி, ஜனாதிபதி சொன்னது போலவே எம்மில் பலரும் சொல்லலாம் "நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே பால் உற்பத்தியை அதிகரிப்போம்". நல்லது, அதிகரிப்போம். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம், அதிகரியுங்கள்.


அதற்கு ஜெர்சி மாடு தீர்வல்ல. மாவட்டத்தினுடைய பால் உற்பத்தியை அதிகரிக்க நீங்கள் ஜெர்சி மாட்டைக் கொண்டு வந்தால், மாவட்டத்தினுடைய இறைச்சி உற்பத்திக்கு என்ன செய்வீர்கள்? இன்று பசுப்பாலை இறக்குமதி செய்கிற நீங்கள், நாளைக்கு ஜெர்சி மாடுகளை, கலப்பின மாடுகளை நீங்கள் கொண்டு வந்துவிட்டால், அடுத்த கட்டமாக இறைச்சியை நீங்கள் இறக்குமதி செய்வீர்கள்.


மாவட்டத்தினுடைய இறைச்சியிலே மட்டக்களப்பு மாவட்டம் தன்னிறைவு பெற்றிருக்கிறது. இந்த மாவட்டத்திலே தமிழர்கள் உட்பட ஏனைய எமது சகோதர இனத்தவர்கள் கூட மாட்டிறைச்சி உண்ணுகிறவர்கள், தன்னிறைவாக அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அந்த மாடு இங்கேதான் உற்பத்தியாகி வளருகிறது. அது நாட்டு மாடால் மாத்திரம்தான் சாத்தியம்.


ஜெர்சி மாடு பசுங்கன்று போட்டால் மாத்திரம்தான் உங்களுக்குப் பால். அந்த நாங்கன்று போட்டால், அதை வச்சு நீங்கள் உழவும் முடியாது, உருட்டவும் முடியாது, வண்டி மாடு பூட்டவும் முடியாது... அது மாடே இல்லை.

எனவே, ஒரு மாட்டினுடைய... ஒரு நாட்டு மாடு, சின்னப் பிள்ளையைக் கேட்டால் சொல்லும் "மாடு எப்படிக் கத்தும்?". 


எந்த நாட்டுல இருக்கிற மாடும் 'அம்மா' என்றுதான் கத்தும், 'உம்மா' என்றுதான் கத்தும் என்று நாங்கள் படித்த பாடம். 'அம்மா' என்றது கன்றுக்குட்டி என்று படித்தோம் நாங்கள். இந்த ஜெர்சி மாடு 'அம்மா' என்று கத்தாது. ஏனென்றால், அது மாடு இல்லை. நீங்க கத்தவச்சுப் பாருங்கோ.எனவே, ஒரு மாடு இல்லாத ஒரு பிராணியை எமது மாவட்டத்திலே கொண்டு வந்து எமது எல்லைக் கிராமங்களை நாசமாக்கி, இன அழிப்பினுடைய இன்னொரு வடிவத்தை அரசு எங்கள் மீது திணிக்க முற்படுகிறது.


ஓர் இனத்தை அழிப்பது என்பது, ஓர் இனத்தை இல்லாமல் செய்வது என்பது மனிதர்களை மாத்திரமல்ல, அவர்களுடைய வாழ்வாதாரம், வரலாற்று அடையாளங்கள், வரலாற்றுப் பண்பாட்டுக் கலாச்சாரங்கள் இவை எல்லாம் அழிக்கப்படுகிற பொழுது அந்த இனமே அழிந்துவிடும். ஜெர்சி மாட்டை வச்சு நீங்க மாட்டு வண்டிச் சவாரி நடத்துவீங்களா?


மாட்டு வண்டிச் சவாரி நடத்த முடியுமா? பொங்கலுக்குப் பொங்க முடியுமா? ஆகவே, எங்கள் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் இந்த மாட்டில் தங்கியிருக்கிறது. எனவே, நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். உங்களுக்குக் கணக்கா பால் எடுக்கிற மாட்டைத் தருவோம் என்று சொல்லி, எங்களுடைய நாளாந்த வாழ்வாதாரத்தை, தமிழினத்தினுடைய அடையாளத்தை, இருப்பை அழிப்பதுதான் இந்த அரசினுடைய நோக்கம் என்பதிலே நாங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும் அன்பானவர்களே.

இறுதியாக, நாங்கள் மகாவலி குறித்துப் பேசினோம். நல்லது, பேசப்பட வேண்டிய விடயம். இலங்கையிலே நீர்ப்பாசனத்திலே, மின்சார உற்பத்தியிலே, தன்னிறைவு உணவு உற்பத்தியிலே மகாவலி பெரிய பங்கு வகிக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், வரலாற்றை நீங்கள் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், வடக்கு-கிழக்கிலே எங்கெல்லாம் மகாவலி ஓடியதோ அங்கெல்லாம் தமிழ் மக்களுடைய இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டு, விகிதாசாரம் குறைக்கப்பட்டு, சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறப் பெற்றதுதான் வரலாறு.


இந்த மகாவலி திட்டங்களினால் தமிழ் மக்களுடைய வரலாறும், அவருடைய நாளாந்த வாழ்வும் பாதுகாக்கப்பட்டதாக இந்த இலங்கையிலே வரலாறு இல்லை. எனவே, கடந்த காலத்திலே நாங்கள் பல அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம். எனவே, மறுபடியும் இந்த மகாவலி 'பி' வலயம், இது வெளியிலிருந்து இருந்தால் என்ன, மட்டக்களப்பிலிருந்து இருந்தால் என்ன... அது எங்களுக்கான தீர்வைத் தர முடியாது.


என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், மகாவலியோடு பேசுவதற்கு மகாவலி யார்? அவர்கள் இந்த நாட்டினுடைய அரசியலமைப்பை பார்க்கிலும் பெரியவர்களோ? நாங்கள் இந்த மகாவலியைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரக் கட்டமைப்பு இந்த நாட்டிலே இல்லை என்றால், அப்படியென்றால் ஏன் இந்த அரசு என்ற கேள்வி எமக்குள் எழுகிறது.


எனவே, இந்த மயிலாத்தமடு - பெரியமாதவனை இன்று 1,003 நாட்களைக் கடந்திருக்கிறது. ஏற்கனவே பலர் சொன்னது போல, எமக்கான நிலம் கிடைக்கப் பெறும் வரையில் நாம் தொடர்ந்து போராடுவோம். மகாவலி எம்மைப் பயன்படுத்த முடியாது, நாம் மகாவலிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நமக்கு என்று வடக்கு-கிழக்கிலே எமக்கான நில உரிமை இருக்கிறது. 


இந்த மண்ணினுடைய மைந்தர்கள் நாங்கள். எங்கிருந்தோ வந்தவர்கள், உங்களுக்கு நாங்கள் இவ்வளவுதான் தருவோம் என்று சொல்லி எங்களுடைய பண்ணையாளர்களை ஏமாற்ற முடியாது.


ஏற்கனவே சொன்னார்கள் "எங்களுக்கு என்ன மூக்குப்பொடியா நீங்க தாரீங்க 1,570 ஏக்கர் வந்து, எங்களுக்கு மூக்குப்பொடிக்கும் காணாது" என்பது போல, எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும். அந்த நிலம் கிடைக்கும் வரையில், பண்ணையாளர்களின் உரிமை கிடைக்கும் வரையில் நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். பண்ணையாளர்களின் விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்தும் முயற்சிப்போம். 

மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது நில உரிமையினை பாதுகாப்பதற்காக முன்னெடுத்துவரும் அறவழி போராட்டத்தின் 1000ஆவது நாளை முன்னிட்டு மயிலத்தமடு,மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று(15-06) நடைபெற்றது. எமக்கான நிலம் கிடைக்கப் பெறும் வரையில் நாம் தொடர்ந்து போராடுவோம். மகாவலி எம்மைப் பயன்படுத்த முடியாது, நாம் மகாவலிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நமக்கு என்று வடக்கு-கிழக்கிலே எமக்கான நில உரிமை இருக்கிறது. இந்த மண்ணினுடைய மைந்தர்கள் நாங்கள். எங்கிருந்தோ வந்தவர்கள், உங்களுக்கு நாங்கள் இவ்வளவுதான் தருவோம் என்று சொல்லி எங்களுடைய பண்ணையாளர்களை ஏமாற்ற முடியாது என சிவில் சமூக செயற்பாட்டாளரும் மனித உரிமை ஆர்வலருமான அருட்தந்தை லூக் ஜோன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது நில உரிமையினை பாதுகாப்பதற்காக முன்னெடுத்துவரும் அறவழி போராட்டத்தின் 1000ஆவது நாளை முன்னிட்டு மயிலத்தமடு,மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று(15-06) நடைபெற்றது.எழுநாவினால் எழுத்தாளர் வை.ஜெயமுருகன் எழுதிய மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை நில அடையாளம், இன அடையாளம்,வாழ்வாதாரம் என்னும் தலைப்பில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் சித்தாண்டியில் உள்ள போராட்டம் நடைபெறும் இடத்தில் மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சங்க தலைவர் நிமலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் குருநாதன்,அருட்தந்தை லுக்,சட்டத்தரணி ஜெயசிங்கம்,சிவில்சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன்,மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் சங்க தலைவி அ.அமலநாயகி,எழுநா அமைப்பின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சார்ள்ஸ் அன்டனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது நூல் வெளியீட்டை செய்வதற்கு உறுதுணையாக இருந்த சார்ள்ஸ் அன்ரனியினால் நூல் வெளியீடுசெய்துவைக்கப்பட்டது.இதன்போது பல்வேறு உரைகளும் இடம்பெற்றன.மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது நில உரிமையினை பாதுகாப்பதற்காக முன்னெடுத்துவரும் அறவழி போராட்டத்தின் 1000ஆவது நாளை கடந்துள்ள நிலையில் தமது கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.குறிப்பாக மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக 1570 ஏக்கர் காணிகளை வழங்குமாறு அறிவுறுத்தியிருந்த நிலையில் அதனை உhயி திணைக்களங்கள் இதுவரையில் நிறைவேற்றவில்லையெனவும் அவற்றினை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை லூக் ஜோன், கடந்த மாதம் 12 ஆம் திகதி அவர்களை அழைத்து உரையாடினார்கள். காரணம் என்னவென்றால், அதனைத் தொடர்ந்து வந்த வாரங்களிலே ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ள இருந்தார்.எனவே, அரசுக்குத் தெரியும் இங்கே ஜனாதிபதி வருகிறபொழுது நிச்சயமாக இவர்கள் போராட்டம் செய்வார்கள். எனவே, ஒரு 1,570 ஏக்கரை கொடுத்துவிட்டால் அன்று போராட்டம் நடைபெறாது, ஜனாதிபதியினுடைய வருகை சுமுகமாக இருக்கும் என்று எண்ணி இவர்களோடு பேசினார்கள்.எங்களுடைய பண்ணையாளர்களும் ஒரு வகையில் அதை நம்பினார்கள். எனவேதான், ஜனாதிபதியை வரவேற்கிறோம் என்று சொல்லி ஒரு பதாகையைக் (டீயnநெச) கட்டினார்கள்.ஆனால், ஜனாதிபதி ஹெலிகாப்டர் (உலங்கு வானூர்தி) மூலமாக வந்து போய்விட்டார். சொல்லப்பட்டது. நாங்கள் போராட்டமும் செய்யவில்லை, தருவதாகச் சொல்லப்பட்ட நிலமும் தரவில்லை. இரண்டாவது முறையாகத் தெரியும், இது ஆயிரம் நாளை எட்டுகிறது. நிச்சயமாக மாவட்டத் தலைவர்கள் ரீதியில் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சொன்னபொழுது, எண்ணம் இருந்தபொழுது, அரசுக்கு அந்தப் பயம் இருந்தபொழுது, அவர்கள் சொன்னார்கள் "நாங்கள் உங்களுக்கான 1,570 ஏக்கரை கெசட் (வர்த்தமானி) பண்ணுவோம்". எப்ப பண்ணுவோம் 12 ஆம் திகதி ஆயிரம் நாள், நாங்கள் 10 ஆம் திகதி வாக்குல கெசட் பண்ணுவோம் என்று சொன்னார்கள்.நாங்கள் நம்பினோம். ஆயிரம் நாள் மிகப்பெரிய போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவில்லை. நாங்கள் அமைதியாகக் காத்திருந்தோம். அதுவும் திட்டமிட்ட வகையிலேயே ஏமாற்றப்பட்டது. ஏன்னா, இன்று இப்பொழுது வரை. 15 ஆம் திகதி இன்று வரை அந்த கெசட் பண்ணப்படவில்லை.எனவே, ஏற்கனவே உரையாளர்கள் சொன்னது போல, இந்த மயிலாத்தமடு - பெரியமாதவனைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாங்கள் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையிலே ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகிறோம்.எங்களுக்குத் தெரியும் நாங்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டு வருகிறோம் என்பது. நாம் ஏமாற்ற. எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதிலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஆனால், அரசும் அரசோடு இணைந்த சில சக்திகளும் தாம் இதில் வெற்றிகண்டுவிட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால், நிச்சயமாக இல்லை.இந்தப் போராட்டம் ஏற்கனவே பலர் பேசியது போல, எமக்கான நிலம் கிடைக்கும் வரையில் இந்தப் போராட்டம் தொடர வேண்டும், தொடரப்பட வேண்டும். இதற்கு இந்த மாவட்டத்தினுடைய மதக் குருக்களாக, சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாக நாங்கள் எப்பொழுதும் உடன் இருப்போம்.ஏன் நாங்கள் இந்தப் போராட்டங்களிலே பங்குபெற வேண்டும் நான் ஒரு பண்ணையாளரா இல்லையே. எனக்கு மாடுகள் இருக்கிறதா இல்லையே. அல்லது எனக்கு நூற்றுக்கணக்கான மாடுகள், கால்நடைகள் இல்லையே. ஏன் நானும் இதிலே பங்குபெற வேண்டும் என்றால், இது வெறுமனே மயிலாத்தமடு - பெரியமாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. அல்லது இங்கிருக்கிற சங்கங்களின் பிரச்சினை மாத்திரமல்ல. அல்லது கால்நடைகள் வைத்திருப்பாரின் பிரச்சினை மாத்திரமல்ல. இது ஒரு மாவட்டத்தின் பிரச்சினை.இது கிழக்கு மாகாணத்தின் பிரச்சினை. இது வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் தீராத ஒரு பிரச்சினையாக இருக்கிறது. எனவேதான், நான் பண்ணையாளரோ இல்லையோ, இது வடக்கு-கிழக்கு மக்களுடைய ஒரு தமிழ்த் தேசியப் பிரச்சினையாக இருக்கிறபடியினால், விரும்பியோ விரும்பாமலோ இந்த நிலப் பிரச்சினையில், இந்த எல்லைப் பிரச்சினையில் நாங்களும் இணைந்து போராட வேண்டிய தேவை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இருக்கிறது.யுத்தத்திற்குப் பின்னதான வடக்கு-கிழக்கிலே நிலத்தைப் பாதுகாக்கின்ற பணியிலே மனிதர்கள் மாத்திரமல்ல, விலங்குகளும் பங்களிப்புச் செய்கின்றன.பறவைகள் சரணாலயங்களாக, கால்நடைகள் மேய்ச்சல் நிலங்களாக. கால்நடைகள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கின்றன. எனவே, நாம் இலகுவாகச் சொல்லிவிட முடியாது "எங்களுக்கு நாங்கள் பால் உற்பத்திதானே, நாங்கள் 1 ½ லீட்டர் பால் கறக்கிற மாட்டை ஏன் வைத்திருக்க நாங்கள் இந்தியாவிலிருந்து, பாகிஸ்தானிலிருந்து நல்ல ஜெர்சி (துநசளநல) மாடுகளைக் கொண்டு வந்தால் ஒரு மாடு 10 லீட்டர், 15 லீட்டர் கறக்கும்தானே" என்று நாங்கள் இலகுவாகச் சொல்லிவிட்டுப் போக முடியாது. ஏனென்றால், நீங்கள் சொல்வது போல உண்மைதான், அந்த மாடுகள் வந்தால் கணக்கா பால் கறக்கும்.நான் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன், அது மாடே இல்லை அது பால் கறக்கும் ஒரு விலங்கு. அது மாடே இல்லை. இன்று நீங்கள் குடிக்கிற இந்தப் பாலின் சுவை, அந்த மாட்டில் வருகிற சுவையாக இருக்காது.அது எல்லாமே இயற்கை. அது உண்ணுவது இயற்கை, அதைப் பராமரிப்பது இயற்கை, செயற்கை செயற்கை, மன்னிக்கவும் செயற்கை. உண்ணுவது செயற்கை, பராமரிக்கப்படுகின்ற விதம் செயற்கை, அது கர்ப்பம் தரிக்கும் விதம் செயற்கை, எல்லாமே செயற்கை. எனவே, அந்தப் பாலும் செயற்கை. சரி, ஜனாதிபதி சொன்னது போலவே எம்மில் பலரும் சொல்லலாம் "நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே பால் உற்பத்தியை அதிகரிப்போம்". நல்லது, அதிகரிப்போம். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம், அதிகரியுங்கள்.அதற்கு ஜெர்சி மாடு தீர்வல்ல. மாவட்டத்தினுடைய பால் உற்பத்தியை அதிகரிக்க நீங்கள் ஜெர்சி மாட்டைக் கொண்டு வந்தால், மாவட்டத்தினுடைய இறைச்சி உற்பத்திக்கு என்ன செய்வீர்கள் இன்று பசுப்பாலை இறக்குமதி செய்கிற நீங்கள், நாளைக்கு ஜெர்சி மாடுகளை, கலப்பின மாடுகளை நீங்கள் கொண்டு வந்துவிட்டால், அடுத்த கட்டமாக இறைச்சியை நீங்கள் இறக்குமதி செய்வீர்கள்.மாவட்டத்தினுடைய இறைச்சியிலே மட்டக்களப்பு மாவட்டம் தன்னிறைவு பெற்றிருக்கிறது. இந்த மாவட்டத்திலே தமிழர்கள் உட்பட ஏனைய எமது சகோதர இனத்தவர்கள் கூட மாட்டிறைச்சி உண்ணுகிறவர்கள், தன்னிறைவாக அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அந்த மாடு இங்கேதான் உற்பத்தியாகி வளருகிறது. அது நாட்டு மாடால் மாத்திரம்தான் சாத்தியம்.ஜெர்சி மாடு பசுங்கன்று போட்டால் மாத்திரம்தான் உங்களுக்குப் பால். அந்த நாங்கன்று போட்டால், அதை வச்சு நீங்கள் உழவும் முடியாது, உருட்டவும் முடியாது, வண்டி மாடு பூட்டவும் முடியாது. அது மாடே இல்லை.எனவே, ஒரு மாட்டினுடைய. ஒரு நாட்டு மாடு, சின்னப் பிள்ளையைக் கேட்டால் சொல்லும் "மாடு எப்படிக் கத்தும்". எந்த நாட்டுல இருக்கிற மாடும் 'அம்மா' என்றுதான் கத்தும், 'உம்மா' என்றுதான் கத்தும் என்று நாங்கள் படித்த பாடம். 'அம்மா' என்றது கன்றுக்குட்டி என்று படித்தோம் நாங்கள். இந்த ஜெர்சி மாடு 'அம்மா' என்று கத்தாது. ஏனென்றால், அது மாடு இல்லை. நீங்க கத்தவச்சுப் பாருங்கோ.எனவே, ஒரு மாடு இல்லாத ஒரு பிராணியை எமது மாவட்டத்திலே கொண்டு வந்து எமது எல்லைக் கிராமங்களை நாசமாக்கி, இன அழிப்பினுடைய இன்னொரு வடிவத்தை அரசு எங்கள் மீது திணிக்க முற்படுகிறது.ஓர் இனத்தை அழிப்பது என்பது, ஓர் இனத்தை இல்லாமல் செய்வது என்பது மனிதர்களை மாத்திரமல்ல, அவர்களுடைய வாழ்வாதாரம், வரலாற்று அடையாளங்கள், வரலாற்றுப் பண்பாட்டுக் கலாச்சாரங்கள் இவை எல்லாம் அழிக்கப்படுகிற பொழுது அந்த இனமே அழிந்துவிடும். ஜெர்சி மாட்டை வச்சு நீங்க மாட்டு வண்டிச் சவாரி நடத்துவீங்களாமாட்டு வண்டிச் சவாரி நடத்த முடியுமா பொங்கலுக்குப் பொங்க முடியுமா ஆகவே, எங்கள் பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் இந்த மாட்டில் தங்கியிருக்கிறது. எனவே, நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். உங்களுக்குக் கணக்கா பால் எடுக்கிற மாட்டைத் தருவோம் என்று சொல்லி, எங்களுடைய நாளாந்த வாழ்வாதாரத்தை, தமிழினத்தினுடைய அடையாளத்தை, இருப்பை அழிப்பதுதான் இந்த அரசினுடைய நோக்கம் என்பதிலே நாங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும் அன்பானவர்களே.இறுதியாக, நாங்கள் மகாவலி குறித்துப் பேசினோம். நல்லது, பேசப்பட வேண்டிய விடயம். இலங்கையிலே நீர்ப்பாசனத்திலே, மின்சார உற்பத்தியிலே, தன்னிறைவு உணவு உற்பத்தியிலே மகாவலி பெரிய பங்கு வகிக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், வரலாற்றை நீங்கள் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், வடக்கு-கிழக்கிலே எங்கெல்லாம் மகாவலி ஓடியதோ அங்கெல்லாம் தமிழ் மக்களுடைய இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டு, விகிதாசாரம் குறைக்கப்பட்டு, சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறப் பெற்றதுதான் வரலாறு.இந்த மகாவலி திட்டங்களினால் தமிழ் மக்களுடைய வரலாறும், அவருடைய நாளாந்த வாழ்வும் பாதுகாக்கப்பட்டதாக இந்த இலங்கையிலே வரலாறு இல்லை. எனவே, கடந்த காலத்திலே நாங்கள் பல அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம். எனவே, மறுபடியும் இந்த மகாவலி 'பி' வலயம், இது வெளியிலிருந்து இருந்தால் என்ன, மட்டக்களப்பிலிருந்து இருந்தால் என்ன. அது எங்களுக்கான தீர்வைத் தர முடியாது.என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், மகாவலியோடு பேசுவதற்கு மகாவலி யார் அவர்கள் இந்த நாட்டினுடைய அரசியலமைப்பை பார்க்கிலும் பெரியவர்களோ நாங்கள் இந்த மகாவலியைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரக் கட்டமைப்பு இந்த நாட்டிலே இல்லை என்றால், அப்படியென்றால் ஏன் இந்த அரசு என்ற கேள்வி எமக்குள் எழுகிறது.எனவே, இந்த மயிலாத்தமடு - பெரியமாதவனை இன்று 1,003 நாட்களைக் கடந்திருக்கிறது. ஏற்கனவே பலர் சொன்னது போல, எமக்கான நிலம் கிடைக்கப் பெறும் வரையில் நாம் தொடர்ந்து போராடுவோம். மகாவலி எம்மைப் பயன்படுத்த முடியாது, நாம் மகாவலிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நமக்கு என்று வடக்கு-கிழக்கிலே எமக்கான நில உரிமை இருக்கிறது. இந்த மண்ணினுடைய மைந்தர்கள் நாங்கள். எங்கிருந்தோ வந்தவர்கள், உங்களுக்கு நாங்கள் இவ்வளவுதான் தருவோம் என்று சொல்லி எங்களுடைய பண்ணையாளர்களை ஏமாற்ற முடியாது.ஏற்கனவே சொன்னார்கள் "எங்களுக்கு என்ன மூக்குப்பொடியா நீங்க தாரீங்க 1,570 ஏக்கர் வந்து, எங்களுக்கு மூக்குப்பொடிக்கும் காணாது" என்பது போல, எங்களுடைய நிலம் எங்களுக்கு வேண்டும். அந்த நிலம் கிடைக்கும் வரையில், பண்ணையாளர்களின் உரிமை கிடைக்கும் வரையில் நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். பண்ணையாளர்களின் விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்தும் முயற்சிப்போம். 

Advertisement

Advertisement

Advertisement