இந்திய பாராளுமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன் புதுடில்லியில் உள்ள பல்வேறு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடில்லி பொலிஸ் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று (09) காலை 8.30 மற்றும் 9.00 மணியளவில் இரண்டு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதில், “புதுடில்லி காலிஸ்தானாக மாறும் - எதிர்வரும் 13ஆம் திகதி பகல் 1.11 மணிக்கு பாராளுமன்றத்துக்குள் குண்டுவெடிக்கும்” என்று அப்சல் குரு மற்றும் காலிஸ்தான் தேசிய இராணுவத்தின் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாராளுமன்ற சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளின் பெயர்களை குறிப்பிட்டு குண்டுவெடிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு புதுடில்லி பொலிஸார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.
புதுடில்லியில் 10க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்தன. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
பலர் பாடசாலை வாயில்கள் அருகே கூடிவந்ததைக் காண முடிந்தது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்தன என்று டில்லி தீயணைப்பு சேவைகள் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அன்று மொத்தம் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. தீயணைப்பு குழுக்கள் உடனடியாக வளாகத்தை அடைந்தன. சோதனை நடந்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கட்டடங்களில் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற வளாகத்திலும் பொலிஸார், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பாராளுமன்றம் மற்றும் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இந்திய பாராளுமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன் புதுடில்லியில் உள்ள பல்வேறு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுடில்லி பொலிஸ் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று (09) காலை 8.30 மற்றும் 9.00 மணியளவில் இரண்டு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.அதில், “புதுடில்லி காலிஸ்தானாக மாறும் - எதிர்வரும் 13ஆம் திகதி பகல் 1.11 மணிக்கு பாராளுமன்றத்துக்குள் குண்டுவெடிக்கும்” என்று அப்சல் குரு மற்றும் காலிஸ்தான் தேசிய இராணுவத்தின் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாராளுமன்ற சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளின் பெயர்களை குறிப்பிட்டு குண்டுவெடிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு புதுடில்லி பொலிஸார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.புதுடில்லியில் 10க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்தன. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.பலர் பாடசாலை வாயில்கள் அருகே கூடிவந்ததைக் காண முடிந்தது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்தன என்று டில்லி தீயணைப்பு சேவைகள் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அன்று மொத்தம் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. தீயணைப்பு குழுக்கள் உடனடியாக வளாகத்தை அடைந்தன. சோதனை நடந்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.தற்போது கட்டடங்களில் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற வளாகத்திலும் பொலிஸார், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.