அதேவேளை, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தொலைபேசி சமிக்ஞைகளும் சேவையில் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
இறம்பொடை மண்சரிவில் உயிரிழந்த 07 பேரின் சடலங்கள் மீட்பு 25 பேர் மாயம் கொத்மலை இறம்பொடை மண்சரிவில் உயிரிழந்த 07 பேரின் சடலங்கள் மீட்கட்பட்டுள்ளது. மேலும் 25 பேரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முன்னதாக 50 பேர் குறித்த பகுதியில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள ஒருவர், கடந்த 27 ஆம் தேதி இரவு மற்றும் நேற்று (28) அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நுவரெலியா - புடலு ஓயா சாலைகளுக்கு இடையில் ரம்பொட கிராமத்தின் நடுப்பகுதி இடிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது.அதேவேளை, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தொலைபேசி சமிக்ஞைகளும் சேவையில் இல்லை எனவும் கூறப்படுகின்றது.