• Aug 04 2025

சுமார் 150 பேருடன் கவிழ்ந்த படகு; 50க்கும் மேற்பட்டோர் பலி - தேடுதல் பணிகள் தீவிரம்!

shanuja / Aug 4th 2025, 9:50 am
image

சுமார் 150 பேருடன் பயணமான படகொன்று மூழ்கியதில் 50 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜேர்மன் தெற்கு அப்யான் மாகாணத்தில் உள்ள அஹ்வர் மாவட்டம் அருகே அரபிக் கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. 


இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,  

 

ஜேர்மன் தெற்கு அப்யான் மாகாணத்தில் சுமார் 150 புலம்பெயர்ந்தோருடன்  படகு ஒன்று பயணித்துள்ளது. 

பயணித்துக் கொண்டிருந்த படகு தீடீரென தெற்கு அப்யான் மாகாணத்தின் அரபிக் கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 


ஜேர்மனில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 


சுமார் 150 புலம்பெயர்ந்தோருடன் பயணித்த படகில் 54 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பலர் மாயமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.


மேலும் ஒன்பது எத்தியோப்பியர்கள் மற்றும் ஒரு ஜேர்மன்  நாட்டவர் என 10 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 


படகு மூழ்கியதில் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று  அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வேலை தேடும் நம்பிக்கையில், ஜிபூட்டி மற்றும் எரித்திரியாவை ஜேர்மனில் இருந்து பிரிக்கும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியைக் கடந்து, புலம்பெயர்ந்தோர் ஒவ்வொரு ஆண்டும் பலவீனமான படகுகளில் பயணித்து சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர். 


இந்த நிலையிலேயே பணிக்காகச் சென்ற புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு அரபிக் கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

சுமார் 150 பேருடன் கவிழ்ந்த படகு; 50க்கும் மேற்பட்டோர் பலி - தேடுதல் பணிகள் தீவிரம் சுமார் 150 பேருடன் பயணமான படகொன்று மூழ்கியதில் 50 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜேர்மன் தெற்கு அப்யான் மாகாணத்தில் உள்ள அஹ்வர் மாவட்டம் அருகே அரபிக் கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,   ஜேர்மன் தெற்கு அப்யான் மாகாணத்தில் சுமார் 150 புலம்பெயர்ந்தோருடன்  படகு ஒன்று பயணித்துள்ளது. பயணித்துக் கொண்டிருந்த படகு தீடீரென தெற்கு அப்யான் மாகாணத்தின் அரபிக் கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. ஜேர்மனில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 150 புலம்பெயர்ந்தோருடன் பயணித்த படகில் 54 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பலர் மாயமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.மேலும் ஒன்பது எத்தியோப்பியர்கள் மற்றும் ஒரு ஜேர்மன்  நாட்டவர் என 10 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். படகு மூழ்கியதில் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று  அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை தேடும் நம்பிக்கையில், ஜிபூட்டி மற்றும் எரித்திரியாவை ஜேர்மனில் இருந்து பிரிக்கும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியைக் கடந்து, புலம்பெயர்ந்தோர் ஒவ்வொரு ஆண்டும் பலவீனமான படகுகளில் பயணித்து சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர். இந்த நிலையிலேயே பணிக்காகச் சென்ற புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு அரபிக் கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement