• Feb 10 2026

நீக்ரோதாராம விகாரையில் இரத்த தான முகாம் !

dileesiya / Jan 23rd 2026, 2:09 pm
image

மத்திய மாகாணத்தின் பிரதான சங்கநாயக்கர், ஓய்வுபெற்ற அதிபர், ,காலஞ்சென்ற  மாகம விமல நாயக்க தேரர் புண்ணியங்களை ஆசீர்வதிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று மாத நினைவேந்தல் புண்ணிய நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.


இந்த நிகழ்வுத் தொடரின் ஆரம்ப நிகழ்வாக, இன்று ஹட்டன் நீக்ரோதாராம விகாரையில்  இரத்த தான முகாம் ஒன்று நடைபெற்றது. 


இதில் பிரதேச மக்களும் பக்தர்களும் பெருமளவில் கலந்துகொண்டு தாராளமாக இரத்த தானம் வழங்கினர்.


இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் விசேட தர்ம பிரசங்கங்கள்  ஹட்டன் நீக்ரோதாராம விகாரையில் நடைபெறவுள்ளன.


நிகழ்வுகளின் நிறைவாக, காலஞ்சென்ற சங்கநாயக தேரருக்கு புண்ணியங்களை அர்ப்பணிக்கும் மூன்று மாத கால தானம் மற்றும் இறுதி தர்ம பிரசங்கம் வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.


காலஞ்சென்ற தேரருக்கு ஆசி வழங்கும் இந்த உன்னதமான புண்ணிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு விகாரையின் நிர்வாக சபை மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


நீக்ரோதாராம விகாரையில் இரத்த தான முகாம் மத்திய மாகாணத்தின் பிரதான சங்கநாயக்கர், ஓய்வுபெற்ற அதிபர், ,காலஞ்சென்ற  மாகம விமல நாயக்க தேரர் புண்ணியங்களை ஆசீர்வதிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று மாத நினைவேந்தல் புண்ணிய நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.இந்த நிகழ்வுத் தொடரின் ஆரம்ப நிகழ்வாக, இன்று ஹட்டன் நீக்ரோதாராம விகாரையில்  இரத்த தான முகாம் ஒன்று நடைபெற்றது. இதில் பிரதேச மக்களும் பக்தர்களும் பெருமளவில் கலந்துகொண்டு தாராளமாக இரத்த தானம் வழங்கினர்.இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் விசேட தர்ம பிரசங்கங்கள்  ஹட்டன் நீக்ரோதாராம விகாரையில் நடைபெறவுள்ளன.நிகழ்வுகளின் நிறைவாக, காலஞ்சென்ற சங்கநாயக தேரருக்கு புண்ணியங்களை அர்ப்பணிக்கும் மூன்று மாத கால தானம் மற்றும் இறுதி தர்ம பிரசங்கம் வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.காலஞ்சென்ற தேரருக்கு ஆசி வழங்கும் இந்த உன்னதமான புண்ணிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு விகாரையின் நிர்வாக சபை மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement