• May 25 2026

Chithra / Jan 29th 2025, 6:56 am
image

அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, எதிர்வரும் மே மாதம் நாடு திரும்புவார் 

என்று மஹிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறிய பஸில் ராஜபக்ச, மீண்டும் என்போது நாடு திரும்புவார் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பஸில் ராஜபக்ச நினைத்தால் நிச்சயம் மீண்டெழ வைக்க முடியும். 

எனினும், அவர் அரசியலில் இருந்து ஓதுங்கிவிட்டார்.

பஸில் ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் விரும்பவில்லை. 

மஹிந்த ராஜபக்சமீது அநுரகுமார திஸாநாயக்க மதிப்பு வைத்துள்ளார். எனவே, மஹிந்தவை வீட்டைவிட்டு அவர் அனுப்பமாட்டார். அப்படி அனுப்பினாலும் பொருத்தமான வீடொன்று வழங்கப்படவுள்ளது.” – என்றார்.


மே மாதம் இலங்கை வரும் பசில் அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, எதிர்வரும் மே மாதம் நாடு திரும்புவார் என்று மஹிந்த ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறிய பஸில் ராஜபக்ச, மீண்டும் என்போது நாடு திரும்புவார் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பஸில் ராஜபக்ச நினைத்தால் நிச்சயம் மீண்டெழ வைக்க முடியும். எனினும், அவர் அரசியலில் இருந்து ஓதுங்கிவிட்டார்.பஸில் ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் விரும்பவில்லை. மஹிந்த ராஜபக்சமீது அநுரகுமார திஸாநாயக்க மதிப்பு வைத்துள்ளார். எனவே, மஹிந்தவை வீட்டைவிட்டு அவர் அனுப்பமாட்டார். அப்படி அனுப்பினாலும் பொருத்தமான வீடொன்று வழங்கப்படவுள்ளது.” – என்றார்.

Advertisement

Advertisement

Advertisement