வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தும்புர போகம்பறை சிறைச்சாலை மற்றும் பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையை அடிப்படையாகக் கொண்டு கூட்டு பொறிமுறையொன்றை நிறுவிய பின்னர், தும்புர சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கைகள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதிகாரிகள் ஆற்றிவரும் சிறந்த சேவைக்கு ஏற்ப அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், சிறைச்சாலைத் திணைக்களத்தில் அதிகளவான வெற்றிடங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், சிறைச்சாலை அதிகாரிகள் ஆற்றும் சேவையை பணத்தால் மதிப்பிட முடியாது எனவும் வலியுறுத்தினார்.
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமடைவதால் சந்தேகநபர்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்படும் நிலையைத் தடுப்பதற்கான திட்டமொன்று அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்குள் தயாரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அணுகுமுறை பின்பற்றப்பட்டாலும், போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படாது எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் அதிகரிப்பு குறித்து கவனம் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.தும்புர போகம்பறை சிறைச்சாலை மற்றும் பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையை அடிப்படையாகக் கொண்டு கூட்டு பொறிமுறையொன்றை நிறுவிய பின்னர், தும்புர சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கைகள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதிகாரிகள் ஆற்றிவரும் சிறந்த சேவைக்கு ஏற்ப அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அத்துடன், சிறைச்சாலைத் திணைக்களத்தில் அதிகளவான வெற்றிடங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், சிறைச்சாலை அதிகாரிகள் ஆற்றும் சேவையை பணத்தால் மதிப்பிட முடியாது எனவும் வலியுறுத்தினார்.இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமடைவதால் சந்தேகநபர்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்படும் நிலையைத் தடுப்பதற்கான திட்டமொன்று அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்குள் தயாரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அணுகுமுறை பின்பற்றப்பட்டாலும், போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படாது எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.