• Apr 18 2026

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல் – காலியில் பரபரப்பு

Aathira / Apr 18th 2026, 2:45 pm
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சம்பத் அத்துகோரள, பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரவான பகுதியில் நேற்று (17) நள்ளிரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் தெரிவித்ததாவது, “டிஜே வத்த” எனும் இடத்தில் குழுவொன்று ரகளையில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து, சம்பத் அத்துகோரள அங்கு சென்று நிலைமையை ஆராய முயன்றுள்ளார். 

அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் உடனடியாக கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல் – காலியில் பரபரப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சம்பத் அத்துகோரள, பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரவான பகுதியில் நேற்று (17) நள்ளிரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.பொலிஸார் தெரிவித்ததாவது, “டிஜே வத்த” எனும் இடத்தில் குழுவொன்று ரகளையில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து, சம்பத் அத்துகோரள அங்கு சென்று நிலைமையை ஆராய முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் உடனடியாக கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement