• Aug 21 2025

தமிழர் தாயகத்தில் இராணுவ அராஜகம் தொடரும் நிலையில்; சர்வதேச அழுத்தம் கட்டாயம் – சாணக்கியன் எம்.பி, பிரிட்டன் தூதுவரிடம் வலியுறுத்தல்!

Thansita / Aug 20th 2025, 7:40 pm
image

தமிழர்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் தொடரும் இராணுவத்தினரின் அராஜகத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசுக்குச் சர்வதேச நாடுகள் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இது மிகவும் அவசியம் என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்.இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ட்ரூ பற்றிக்கிடம் நேரில் வலியுறுத்தினார்

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவரைக்  கொழும்பில் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சாணக்கியன் எம்.பி. நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போதே சாணக்கியன் எம்.பி. மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் சாணக்கியன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

"பிரிட்டன் தூதுவருடனான சந்திப்பின்போது வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

அதில் முக்கியமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் , அரசியல் கைதிகள், செம்மணி, காணிப் பிரச்சினைகள், இராணுவத் தலையீடு குறித்தும், அதிகளவு இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராக நடந்து முடிந்த ஹர்த்தால் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அதனுடன் அரசின் வடக்கு - கிழக்குக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது." - என்றார்.

தமிழர் தாயகத்தில் இராணுவ அராஜகம் தொடரும் நிலையில்; சர்வதேச அழுத்தம் கட்டாயம் – சாணக்கியன் எம்.பி, பிரிட்டன் தூதுவரிடம் வலியுறுத்தல் தமிழர்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் தொடரும் இராணுவத்தினரின் அராஜகத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கை அரசுக்குச் சர்வதேச நாடுகள் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இது மிகவும் அவசியம் என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்.இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ட்ரூ பற்றிக்கிடம் நேரில் வலியுறுத்தினார்இலங்கைக்கான பிரிட்டன் தூதுவரைக்  கொழும்பில் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சாணக்கியன் எம்.பி. நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே சாணக்கியன் எம்.பி. மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.இந்தச் சந்திப்பு தொடர்பில் சாணக்கியன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,"பிரிட்டன் தூதுவருடனான சந்திப்பின்போது வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதில் முக்கியமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் , அரசியல் கைதிகள், செம்மணி, காணிப் பிரச்சினைகள், இராணுவத் தலையீடு குறித்தும், அதிகளவு இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராக நடந்து முடிந்த ஹர்த்தால் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதனுடன் அரசின் வடக்கு - கிழக்குக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement