• May 24 2025

தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம்; விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சிறுமி..! திருமலையில் துயரம்

Chithra / May 14th 2024, 5:25 pm
image

 

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாநகர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 17 வயதான கோணேஸ் துசானி  என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவாநகர் பகுதியில் வசித்துவரும் குறித்த சிறுமிக்கும் தாய்க்கும் இடையே இன்றைய தினம் காலை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்பின் தாய் குறித்த சிறுமியின் அக்காவை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் 

காலை 7.00 மணியளவில் குறித்த சிறுமி உயிரை மாய்க்க முயற்சித்ததாகவும்,

அயலவர்கள் சிறுமியைக் காப்பாற்றி திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதம்; விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சிறுமி. திருமலையில் துயரம்  திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாநகர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.இன்று காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 17 வயதான கோணேஸ் துசானி  என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தேவாநகர் பகுதியில் வசித்துவரும் குறித்த சிறுமிக்கும் தாய்க்கும் இடையே இன்றைய தினம் காலை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதன்பின் தாய் குறித்த சிறுமியின் அக்காவை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் காலை 7.00 மணியளவில் குறித்த சிறுமி உயிரை மாய்க்க முயற்சித்ததாகவும்,அயலவர்கள் சிறுமியைக் காப்பாற்றி திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now