• May 21 2026

கிழக்கில் 23 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Chithra / Oct 21st 2025, 8:56 pm
image

 கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 23 தொழில்நுட்ப அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் இன்று  திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்  வைத்து வழங்கப்பட்டன.

தற்போது கிழக்கு மாகாணத்தில் 59 தொழில்நுட்ப அதிகாரி வெற்றிடங்கள் நிலவி வருகின்றன. 

இதனால், அரசாங்கம் ஒதுக்கிய மூலதன நிதிகளைப் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை சமாளிக்கும் நோக்கில் இந்நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் ஆண்டில் மாகாண சபைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்பதால், திட்டங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் இத்தொழில்நுட்ப நியமனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

120க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து நேர்முகத் தேர்வுகளுக்குப் பின் தகுதியான 23 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனக் கடிதங்களை இதன்போது பெற்றனர்.


கிழக்கில் 23 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு  கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 23 தொழில்நுட்ப அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் இன்று  திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்  வைத்து வழங்கப்பட்டன.தற்போது கிழக்கு மாகாணத்தில் 59 தொழில்நுட்ப அதிகாரி வெற்றிடங்கள் நிலவி வருகின்றன. இதனால், அரசாங்கம் ஒதுக்கிய மூலதன நிதிகளைப் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை சமாளிக்கும் நோக்கில் இந்நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.மேலும், எதிர்வரும் ஆண்டில் மாகாண சபைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்பதால், திட்டங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் இத்தொழில்நுட்ப நியமனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.120க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து நேர்முகத் தேர்வுகளுக்குப் பின் தகுதியான 23 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனக் கடிதங்களை இதன்போது பெற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement