• Apr 15 2026

வடக்கு விவசாயப் போதனாசிரியர்கள் ,கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் விழா!

Ziya / Apr 7th 2026, 4:23 pm
image

நியமனங்களைப் பெற்றுவிட்டு வேலை எதுவும் செய்யாமல் பேசாமல் இருந்து விட்டும் போகலாம்; அல்லது, எமது மக்களுக்காக நீங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்கலாம். தெரிவு உங்களுடையதுதான். ஒரு கதிரை உங்களுக்குத் தரப்படுகின்றது. அதை எவ்வாறு அலங்கரிக்கப் போகிறீர்கள் என்பதில் தான் உங்களின் சிறப்பு அடங்கியுள்ளது. எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்வதில் தான் உங்களின் உண்மையான வெற்றியும் தங்கியிருக்கின்றது என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்தார்.


வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான 33 விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் 20 கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ தலைமையில் விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (07) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இங்கு பிரதம விருந்தினர்களுள் ஒருவராகப் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,


எமது நாட்டில் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச நியமனங்கள் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போதைய ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்க  தலைமையிலான புதிய அரசாங்கம் அமைந்த பின்னரே, இதற்கான புதிய பொறிமுறை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் உருவாக்கப்பட்டது. 


நாம் மாகாணத்தின் ஆளணி வெற்றிடங்கள் மற்றும் தேவைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்த போது, அதனைச் சாதகமாகப் பரிசீலித்து, ஆளணிகளை விரைவாகப் பெற்றுத்தரும் பெரும் முயற்சியை அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் மேற்கொண்டனர். 


இவர்களுக்கு மேலாக, எமது மாகாணத்தின் மீதும் மக்கள் மீதும் அளவுகடந்த அன்பு வைத்துள்ள  அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதற்காகக் கடுமையாக உழைத்திருந்தார். 


இந்த இடத்தில் ஒரு விடயத்தை நான் மிகவும் பெருமையுடன் சுட்டிக்காட்ட வேண்டும். இவர்கள் இந்த நியமனங்களுக்கான அனுமதிகளைப் பெற்றுத் தந்தார்களே தவிர, 'எங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலை கொடுங்கள்' என்று எந்தவொரு பெயர் பட்டியலையும் என் கைக்குத் தரவில்லை.


வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி, விண்ணப்பங்கள் கோரப்பட்டு, பரீட்சைகள் நடத்தப்பட்டு, நேர்முகத் தேர்வின் ஊடாகவே முற்றிலும் தகுதியின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இங்கு யாருடைய பரிந்துரைக்கும் இடமில்லை.


இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். அண்மையில் ஒரு நியமனம் தொடர்பான பயிற்சிப் பரீட்சை நடைபெற்றபோது, முன்னாள் அரசாங்கத்தில் அதிகாரப் பதவியிலிருந்த அரசியல்வாதி ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, 'எனக்கு வேண்டிய ஒருவர் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகின்றார்' என்று மறைமுகமாக ஒரு அழுத்தத்தைக் கொடுக்க முயன்றார். 


நான் அவரிடம் மிகவும் தெளிவாக, 'அவர் தோற்றட்டும்; ஆனால் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தெரிவுகள் நடக்கும்' என்று பதிலளித்தேன். 


 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  உறுதியான தலைமைத்துவம் இருப்பதால்தான் அவ்வாறு எனக்கும் பதிலளிக்கக் கூடியதாக இருந்தது. அதன் பிறகு அவர் எதுவும் பேசவில்லை. பாரம்பரிய அரசியல்வாதிகளின் எண்ணம் எப்படி இருந்தது, தற்போதைய அரசாங்கத்தின் கட்டமைப்பு எவ்வளவு தூய்மையாக இருக்கின்றது என்பதை உணர்த்தவே இதைக் குறிப்பிட்டேன். இந்த நியமனங்கள் எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி, அதிகாரிகளால் சுதந்திரமாக வழங்கப்பட்டவை என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றேன்.


விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்தப் பணியை வெறுமனே மாதச் சம்பளத்துக்கான ஒரு கடமையாகச் செய்யாமல், உளப்பூர்வமாக நேசித்துச் செய்யும்போதுதான் அதற்கான முழுமையான பலன் கிடைக்கும்.


ஒரு அரச உத்தியோகத்தரின் உண்மையான வெற்றி எதில் தங்கியுள்ளது என்பதற்குச் சிறந்ததொரு முன்னுதாரணத்தை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.


கடந்த ஆண்டு மன்னார் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள இரணை இலுப்பைக்குளம் கிராமத்துக்கு நான் சென்றிருந்தேன். 


அங்கு பெரிய வெங்காயத்தின் உண்மை விதை உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒரு விவசாயியின் தோட்டத்தைப் பார்வையிட்டேன். அது மிகவும் இலாபமீட்டக் கூடிய ஒரு பயிர்ச்செய்கை. அதன்போது அங்கு வந்த அந்தப் பிரதேசத்தின் விவசாயப் போதனாசிரியர் என்னிடம், 'இங்குள்ள விவசாயிகள் இந்தப் பயிர்ச்செய்கையில் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றார்கள். 


ஆனால் முதலீட்டில் தான் சிக்கல் உள்ளது. மாகாண சபை ஊடாக நிதியுதவி கிடைத்தால் இவர்கள் மாபெரும் வெற்றியைப் பெறுவார்கள்' என்று உறுதியளித்தார்.


உடனடியாக அவரைத் திட்ட முன்மொழிவைச் சமர்ப்பிக்கக் கூறினேன். அவரும், மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளரும் மிக விரைவாகச் செயற்பட்டார்; அதற்கான நிதியும், அங்கு தேவைப்பட்ட விவசாயக் கிணற்றுக்கான நிதியும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. கடந்த மாத இறுதியில் அந்த விவசாயிகளின் அறுவடை நடைபெற்றது. அவர்கள் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தார்கள்.


அங்கு அந்த விவசாயிகள் என்னிடம் சொன்ன ஒரு வார்த்தை,'தயவுசெய்து இந்த விவசாயப் போதனாசிரியரை இங்கிருந்து இடமாற்றம் செய்துவிடாதீர்கள். இவரால் தான் நாங்கள் இன்று இவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கின்றோம்.'இதுதான் ஒரு அரச உத்தியோகத்தர் சம்பாதிக்கக் கூடிய உண்மையான சொத்து! இது தரும் ஆத்ம திருப்தியை, நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பெற்றுக்கொள்ள முடியாது.


இன்றைய உலகச் சூழலும், காலநிலை மாற்றங்களும் எமக்கு பல புதிய செய்திகளை உணர்த்தி நிற்கின்றன. 


உணவு உற்பத்தியில் நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டும்.அதேநேரம், தற்போதைய காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், எமது பாரம்பரிய பயிர்ச் செய்கை முறைகளிலிருந்து நாம் நவீன முறைக்கு மாற வேண்டும். எமது விவசாயிகள் பாரம்பரிய முறைகளையே அதிகம் நம்புபவர்கள். அவர்களுக்கு நவீன விவசாய முறைகளின் அவசியத்தை எடுத்துச் சொல்லி, அதனைப் புரியவைத்து, அந்தத் தொழில்நுட்பங்களுக்கு அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உங்களிடமே உள்ளது. ஆய்வுகூடங்களில் உறங்கும் தொழில்நுட்பங்களை விவசாயிகளின் நிலங்களுக்குக் கொண்டுசெல்லும் பாலமாக நீங்கள் மாறவேண்டும்.


விவசாயத்தைப் பற்றிப் பேசுகின்ற அதேவேளை, கால்நடை வளர்ப்பையும் நாம் தனித்துப் பார்க்க முடியாது. ஒருங்கிணைந்த பண்ணை முறை ஊடாக விவசாயக் கழிவுகளைக் கால்நடைகளுக்கும், கால்நடைக் கழிவுகளை விவசாய நிலங்களுக்கும் இயற்கைப் பசளையாகப் பயன்படுத்தும் பொறிமுறையை நீங்கள் விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இது அவர்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து இலாபத்தை அதிகரிக்கும்.


சிறு வயதில் 'மண்புழு விவசாயியின் தோழன்' எனப் படித்திருப்போம். அந்த விவசாயியின் மற்றொரு உண்மையான உற்ற தோழன் விவசாயப் போதனாசிரியர்களான நீங்கள்தான்.


பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளையும் வளர்ப்பவர்களாகவே இருப்பார்கள். கடந்த ஆண்டு ஏற்பட்ட எதிர்பாராத இயற்கைப் பேரிடரால், எமது வடக்கு மாகாணத்தில் பல கால்நடைகள் உயிரிழந்தன. ஆனால், பல கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை உரிய முறையில் பதிவு செய்யாத காரணத்தால், அவர்களால் தகுந்த இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை உருவானது.


வாழ்வாதாரத்தையும் இழந்து, இழப்பீடும் இன்றி அவர்கள் தவித்தார்கள். எனவே, கால்நடை வளர்ப்பாளர்களை விழிப்படையச் செய்து, விலங்குகளைப் பதிவு செய்யவும், கால்நடைக் காப்புறுதிகளை மேற்கொள்ளவும் வழிகாட்ட வேண்டியது கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களின் தலையாய கடமையாகும். 


அத்துடன் வெறும் பால் உற்பத்தியோடு மாத்திரம் நின்றுவிடாமல், பெறுமதி சேர் உற்பத்திகளாக மாற்றுவதற்கும் நீங்கள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்' என்று தெரிவித்தார்.


இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், கூட்டுறவுத்துறை பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை மாகாணப் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள், புதிதாக நியமனம் பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


இந்த நியமனங்கள் தொடர்பிலும், அரசாங்கத்தின் தூரநோக்குச் சிந்தனைகள் தொடர்பிலும் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்ட  அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரும் விரிவான கருத்துக்களைத் தெரிவித்ததுடன், புதிய நியமனதாரிகளுக்கான பெறுமதியான அறிவுரைகளையும் வழங்கி வைத்தனர்.


வடக்கு விவசாயப் போதனாசிரியர்கள் ,கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் விழா நியமனங்களைப் பெற்றுவிட்டு வேலை எதுவும் செய்யாமல் பேசாமல் இருந்து விட்டும் போகலாம்; அல்லது, எமது மக்களுக்காக நீங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்கலாம். தெரிவு உங்களுடையதுதான். ஒரு கதிரை உங்களுக்குத் தரப்படுகின்றது. அதை எவ்வாறு அலங்கரிக்கப் போகிறீர்கள் என்பதில் தான் உங்களின் சிறப்பு அடங்கியுள்ளது. எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்வதில் தான் உங்களின் உண்மையான வெற்றியும் தங்கியிருக்கின்றது என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்தார்.வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான 33 விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் 20 கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ தலைமையில் விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (07) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இங்கு பிரதம விருந்தினர்களுள் ஒருவராகப் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,எமது நாட்டில் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச நியமனங்கள் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போதைய ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்க  தலைமையிலான புதிய அரசாங்கம் அமைந்த பின்னரே, இதற்கான புதிய பொறிமுறை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் உருவாக்கப்பட்டது. நாம் மாகாணத்தின் ஆளணி வெற்றிடங்கள் மற்றும் தேவைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்த போது, அதனைச் சாதகமாகப் பரிசீலித்து, ஆளணிகளை விரைவாகப் பெற்றுத்தரும் பெரும் முயற்சியை அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் மேற்கொண்டனர். இவர்களுக்கு மேலாக, எமது மாகாணத்தின் மீதும் மக்கள் மீதும் அளவுகடந்த அன்பு வைத்துள்ள  அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதற்காகக் கடுமையாக உழைத்திருந்தார். இந்த இடத்தில் ஒரு விடயத்தை நான் மிகவும் பெருமையுடன் சுட்டிக்காட்ட வேண்டும். இவர்கள் இந்த நியமனங்களுக்கான அனுமதிகளைப் பெற்றுத் தந்தார்களே தவிர, 'எங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலை கொடுங்கள்' என்று எந்தவொரு பெயர் பட்டியலையும் என் கைக்குத் தரவில்லை.வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி, விண்ணப்பங்கள் கோரப்பட்டு, பரீட்சைகள் நடத்தப்பட்டு, நேர்முகத் தேர்வின் ஊடாகவே முற்றிலும் தகுதியின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இங்கு யாருடைய பரிந்துரைக்கும் இடமில்லை.இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். அண்மையில் ஒரு நியமனம் தொடர்பான பயிற்சிப் பரீட்சை நடைபெற்றபோது, முன்னாள் அரசாங்கத்தில் அதிகாரப் பதவியிலிருந்த அரசியல்வாதி ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, 'எனக்கு வேண்டிய ஒருவர் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுகின்றார்' என்று மறைமுகமாக ஒரு அழுத்தத்தைக் கொடுக்க முயன்றார். நான் அவரிடம் மிகவும் தெளிவாக, 'அவர் தோற்றட்டும்; ஆனால் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தெரிவுகள் நடக்கும்' என்று பதிலளித்தேன்.  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  உறுதியான தலைமைத்துவம் இருப்பதால்தான் அவ்வாறு எனக்கும் பதிலளிக்கக் கூடியதாக இருந்தது. அதன் பிறகு அவர் எதுவும் பேசவில்லை. பாரம்பரிய அரசியல்வாதிகளின் எண்ணம் எப்படி இருந்தது, தற்போதைய அரசாங்கத்தின் கட்டமைப்பு எவ்வளவு தூய்மையாக இருக்கின்றது என்பதை உணர்த்தவே இதைக் குறிப்பிட்டேன். இந்த நியமனங்கள் எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி, அதிகாரிகளால் சுதந்திரமாக வழங்கப்பட்டவை என்பதை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றேன்.விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்தப் பணியை வெறுமனே மாதச் சம்பளத்துக்கான ஒரு கடமையாகச் செய்யாமல், உளப்பூர்வமாக நேசித்துச் செய்யும்போதுதான் அதற்கான முழுமையான பலன் கிடைக்கும்.ஒரு அரச உத்தியோகத்தரின் உண்மையான வெற்றி எதில் தங்கியுள்ளது என்பதற்குச் சிறந்ததொரு முன்னுதாரணத்தை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.கடந்த ஆண்டு மன்னார் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள இரணை இலுப்பைக்குளம் கிராமத்துக்கு நான் சென்றிருந்தேன். அங்கு பெரிய வெங்காயத்தின் உண்மை விதை உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒரு விவசாயியின் தோட்டத்தைப் பார்வையிட்டேன். அது மிகவும் இலாபமீட்டக் கூடிய ஒரு பயிர்ச்செய்கை. அதன்போது அங்கு வந்த அந்தப் பிரதேசத்தின் விவசாயப் போதனாசிரியர் என்னிடம், 'இங்குள்ள விவசாயிகள் இந்தப் பயிர்ச்செய்கையில் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றார்கள். ஆனால் முதலீட்டில் தான் சிக்கல் உள்ளது. மாகாண சபை ஊடாக நிதியுதவி கிடைத்தால் இவர்கள் மாபெரும் வெற்றியைப் பெறுவார்கள்' என்று உறுதியளித்தார்.உடனடியாக அவரைத் திட்ட முன்மொழிவைச் சமர்ப்பிக்கக் கூறினேன். அவரும், மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளரும் மிக விரைவாகச் செயற்பட்டார்; அதற்கான நிதியும், அங்கு தேவைப்பட்ட விவசாயக் கிணற்றுக்கான நிதியும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. கடந்த மாத இறுதியில் அந்த விவசாயிகளின் அறுவடை நடைபெற்றது. அவர்கள் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தார்கள்.அங்கு அந்த விவசாயிகள் என்னிடம் சொன்ன ஒரு வார்த்தை,'தயவுசெய்து இந்த விவசாயப் போதனாசிரியரை இங்கிருந்து இடமாற்றம் செய்துவிடாதீர்கள். இவரால் தான் நாங்கள் இன்று இவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கின்றோம்.'இதுதான் ஒரு அரச உத்தியோகத்தர் சம்பாதிக்கக் கூடிய உண்மையான சொத்து இது தரும் ஆத்ம திருப்தியை, நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பெற்றுக்கொள்ள முடியாது.இன்றைய உலகச் சூழலும், காலநிலை மாற்றங்களும் எமக்கு பல புதிய செய்திகளை உணர்த்தி நிற்கின்றன. உணவு உற்பத்தியில் நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டும்.அதேநேரம், தற்போதைய காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், எமது பாரம்பரிய பயிர்ச் செய்கை முறைகளிலிருந்து நாம் நவீன முறைக்கு மாற வேண்டும். எமது விவசாயிகள் பாரம்பரிய முறைகளையே அதிகம் நம்புபவர்கள். அவர்களுக்கு நவீன விவசாய முறைகளின் அவசியத்தை எடுத்துச் சொல்லி, அதனைப் புரியவைத்து, அந்தத் தொழில்நுட்பங்களுக்கு அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உங்களிடமே உள்ளது. ஆய்வுகூடங்களில் உறங்கும் தொழில்நுட்பங்களை விவசாயிகளின் நிலங்களுக்குக் கொண்டுசெல்லும் பாலமாக நீங்கள் மாறவேண்டும்.விவசாயத்தைப் பற்றிப் பேசுகின்ற அதேவேளை, கால்நடை வளர்ப்பையும் நாம் தனித்துப் பார்க்க முடியாது. ஒருங்கிணைந்த பண்ணை முறை ஊடாக விவசாயக் கழிவுகளைக் கால்நடைகளுக்கும், கால்நடைக் கழிவுகளை விவசாய நிலங்களுக்கும் இயற்கைப் பசளையாகப் பயன்படுத்தும் பொறிமுறையை நீங்கள் விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இது அவர்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து இலாபத்தை அதிகரிக்கும்.சிறு வயதில் 'மண்புழு விவசாயியின் தோழன்' எனப் படித்திருப்போம். அந்த விவசாயியின் மற்றொரு உண்மையான உற்ற தோழன் விவசாயப் போதனாசிரியர்களான நீங்கள்தான்.பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளையும் வளர்ப்பவர்களாகவே இருப்பார்கள். கடந்த ஆண்டு ஏற்பட்ட எதிர்பாராத இயற்கைப் பேரிடரால், எமது வடக்கு மாகாணத்தில் பல கால்நடைகள் உயிரிழந்தன. ஆனால், பல கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை உரிய முறையில் பதிவு செய்யாத காரணத்தால், அவர்களால் தகுந்த இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை உருவானது.வாழ்வாதாரத்தையும் இழந்து, இழப்பீடும் இன்றி அவர்கள் தவித்தார்கள். எனவே, கால்நடை வளர்ப்பாளர்களை விழிப்படையச் செய்து, விலங்குகளைப் பதிவு செய்யவும், கால்நடைக் காப்புறுதிகளை மேற்கொள்ளவும் வழிகாட்ட வேண்டியது கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களின் தலையாய கடமையாகும். அத்துடன் வெறும் பால் உற்பத்தியோடு மாத்திரம் நின்றுவிடாமல், பெறுமதி சேர் உற்பத்திகளாக மாற்றுவதற்கும் நீங்கள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்' என்று தெரிவித்தார்.இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், கூட்டுறவுத்துறை பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை மாகாணப் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள், புதிதாக நியமனம் பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இந்த நியமனங்கள் தொடர்பிலும், அரசாங்கத்தின் தூரநோக்குச் சிந்தனைகள் தொடர்பிலும் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்ட  அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரும் விரிவான கருத்துக்களைத் தெரிவித்ததுடன், புதிய நியமனதாரிகளுக்கான பெறுமதியான அறிவுரைகளையும் வழங்கி வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement