• Dec 09 2024

அப்பிள் நிறுவனம் இதை செய்தால் தடை விதிக்கப்படும் - மீம்ஸ் மூலம் பதிவிட்ட எலன் மாஸ்க்...!

Anaath / Jun 11th 2024, 7:22 pm
image

அப்பிள் இயங்குதளத்தில் (ஓஎஸ்) ஓபன்ஏஐ இணைந்தால்  தனது நிறுவனங்களில் ஆப்பிள் கருவிகள் தடை செய்யப்படும்" என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர் பில் அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  “ஆப்பிள் அதன் இயங்குதளத்தில் (ஓஎஸ்) ஓபன்ஏஐ இணைவு மேற்கொண்டால் எனது நிறுவனங்களில் ஆப்பிள் கருவிகள் தடை செய்யப்படும். இது ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு மீறல்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் செயற்கை தொழில்நுட்ப முன்னோடி ஓபன்ஏஐ உடன் இணைந்து சில வசதிகளை தனது கருவிகளில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தது.

தனியுரிமையை முதன்மையாக கொண்ட ஏஐ இணைவு என ஆப்பிள் தெரிவிக்கிறது. பயனர்களின் தனிப்பட்ட கருவியில் செயல்படுதல் மற்றும் அவரவருக்கான தனிப்பட்ட வலைஇணைப்பு வழியாக இந்த வசதிகள் செறிவூட்டப்படும் என ஆப்பிள் குறிப்பிடுகிறது.

தன்னளவில் ஒரு செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இயலாத ஆப்பிள் எப்படியோ ஓபன்ஏஐ- பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்யும் என்பதை கண்டறிந்திருந்து சொல்வது அபத்தம் என எலான் மஸ்க் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 2015-ல் ஓபன்ஏஐ உருவாக்கத்தில் உடனிருந்த எலான் மஸ்க், ஓபன்ஏஐ ஆரம்பிக்கப்பட்ட மனிதத்துவத்துக்கு பயனளிப்பது மற்றும் இலாப நோக்கமற்றது என்கிற இலக்குகளை தற்போது மீறியுள்ளதாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஓபன்ஏஐக்குப் போட்டியாக அவர் எக்ஸ்ஏஐ என்பதை உருவாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனை மீம் ஒன்றின் மூலமாக அவர் விமர்சித்த பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.

அப்பிள் நிறுவனம் இதை செய்தால் தடை விதிக்கப்படும் - மீம்ஸ் மூலம் பதிவிட்ட எலன் மாஸ்க். அப்பிள் இயங்குதளத்தில் (ஓஎஸ்) ஓபன்ஏஐ இணைந்தால்  தனது நிறுவனங்களில் ஆப்பிள் கருவிகள் தடை செய்யப்படும்" என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர் பில் அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அந்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  “ஆப்பிள் அதன் இயங்குதளத்தில் (ஓஎஸ்) ஓபன்ஏஐ இணைவு மேற்கொண்டால் எனது நிறுவனங்களில் ஆப்பிள் கருவிகள் தடை செய்யப்படும். இது ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு மீறல்” எனப் பதிவிட்டுள்ளார்.முன்னதாக தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் செயற்கை தொழில்நுட்ப முன்னோடி ஓபன்ஏஐ உடன் இணைந்து சில வசதிகளை தனது கருவிகளில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தது.தனியுரிமையை முதன்மையாக கொண்ட ஏஐ இணைவு என ஆப்பிள் தெரிவிக்கிறது. பயனர்களின் தனிப்பட்ட கருவியில் செயல்படுதல் மற்றும் அவரவருக்கான தனிப்பட்ட வலைஇணைப்பு வழியாக இந்த வசதிகள் செறிவூட்டப்படும் என ஆப்பிள் குறிப்பிடுகிறது.தன்னளவில் ஒரு செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இயலாத ஆப்பிள் எப்படியோ ஓபன்ஏஐ- பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்யும் என்பதை கண்டறிந்திருந்து சொல்வது அபத்தம் என எலான் மஸ்க் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் 2015-ல் ஓபன்ஏஐ உருவாக்கத்தில் உடனிருந்த எலான் மஸ்க், ஓபன்ஏஐ ஆரம்பிக்கப்பட்ட மனிதத்துவத்துக்கு பயனளிப்பது மற்றும் இலாப நோக்கமற்றது என்கிற இலக்குகளை தற்போது மீறியுள்ளதாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.ஓபன்ஏஐக்குப் போட்டியாக அவர் எக்ஸ்ஏஐ என்பதை உருவாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.இதனை மீம் ஒன்றின் மூலமாக அவர் விமர்சித்த பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement