அமெரிக்காவில் ஒன்றுடன் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் நேற்று குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
லாகார்டியா விமான நிலையத்தில் டெல்டா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானங்களே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளானது.
லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு டெல்டா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில், தரையிறங்கிய மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.
இதன்போதே நிறுத்தப்பட்டிருந்த விமானத்துடன் தரையிறங்கிய மற்றுமொரு விமானம் நேருக்குநேர் மோதிக்கொண்டது.
விமான தரையிறங்கி மெதுவாக நகர்ந்து விபத்திற்குள்ளானதால் பயணிகளின் உயிருக்கு அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
எனினும் விபத்தில் ஒரு விமான பணியாளர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் தரையிறங்கிய விமானத்தின் இறக்கை நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் மூக்கில் பலமாக மோதியது. இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது.
அதிர்ஸ்டவசமாக விமானம் தரையிறங்கி நகர்ந்தபோது விபத்து சம்பவித்துள்ளது. தரையிறங்கிய வேகத்தில் விபத்து நிகழ்ந்திருந்தால் பயணிகளின் நிலை கேள்விக்குறியாகியிருக்கும்.
நிறுத்தப்பட்ட விமானத்துடன் மோதிய மற்றுமொரு விமானம்; அதிர்ஸ்டவசமாக தப்பிய பயணிகள் - விமானப் பணியாளர் காயம் அமெரிக்காவில் ஒன்றுடன் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் நேற்று குறித்த விபத்து சம்பவித்துள்ளது. லாகார்டியா விமான நிலையத்தில் டெல்டா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானங்களே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளானது. லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு டெல்டா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில், தரையிறங்கிய மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.இதன்போதே நிறுத்தப்பட்டிருந்த விமானத்துடன் தரையிறங்கிய மற்றுமொரு விமானம் நேருக்குநேர் மோதிக்கொண்டது. விமான தரையிறங்கி மெதுவாக நகர்ந்து விபத்திற்குள்ளானதால் பயணிகளின் உயிருக்கு அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. எனினும் விபத்தில் ஒரு விமான பணியாளர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்தில் தரையிறங்கிய விமானத்தின் இறக்கை நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் மூக்கில் பலமாக மோதியது. இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது. அதிர்ஸ்டவசமாக விமானம் தரையிறங்கி நகர்ந்தபோது விபத்து சம்பவித்துள்ளது. தரையிறங்கிய வேகத்தில் விபத்து நிகழ்ந்திருந்தால் பயணிகளின் நிலை கேள்விக்குறியாகியிருக்கும்.