• May 23 2026

ரூ.11 கோடி பெறுமதியுடைய தங்கத்தை இழந்த மூதாட்டி

Chithra / Oct 28th 2025, 8:22 pm
image


திஸ்ஸமஹாராம பகுதியில் வீடொன்றை உடைத்து, 11 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் உடமைகள் திருடப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று  திஸ்ஸமஹாராம, ரப்பர்வத்தையைச் சேர்ந்த 88 வயதுடைய மூதாட்டி ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தனது இரண்டு மகள்கள் துபாய் நாட்டிலும், ஒரு மகன் கனடாவிலும் வசிப்பதாகவும், 

அவர்கள் அவ்வப்போது தனக்கு அன்பளிப்பாக வழங்கிய, 11 கோடியே 49 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் (114,922,000) பெறுமதியான தங்க ஆபரணங்களை வீட்டில் உள்ள சில அலுமாரிகளில் துணிகளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததாகவும், திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் 300 பவுன்ஸுக்கும் அண்மித்தவை என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சமையலறைக்கு அருகிலிருந்த 3,250 கிலோ கிராம் நிறையுடைய 50 மூடை நெல், வீட்டிலிருந்த பல மின் உபகரணங்கள், ஒரு சலவை இயந்திரம் ஆகியனவும் திருடப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.11 கோடி பெறுமதியுடைய தங்கத்தை இழந்த மூதாட்டி திஸ்ஸமஹாராம பகுதியில் வீடொன்றை உடைத்து, 11 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் உடமைகள் திருடப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று  திஸ்ஸமஹாராம, ரப்பர்வத்தையைச் சேர்ந்த 88 வயதுடைய மூதாட்டி ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது இரண்டு மகள்கள் துபாய் நாட்டிலும், ஒரு மகன் கனடாவிலும் வசிப்பதாகவும், அவர்கள் அவ்வப்போது தனக்கு அன்பளிப்பாக வழங்கிய, 11 கோடியே 49 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் (114,922,000) பெறுமதியான தங்க ஆபரணங்களை வீட்டில் உள்ள சில அலுமாரிகளில் துணிகளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததாகவும், திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் 300 பவுன்ஸுக்கும் அண்மித்தவை என்றும் அவர் கூறியுள்ளார்.அத்துடன், சமையலறைக்கு அருகிலிருந்த 3,250 கிலோ கிராம் நிறையுடைய 50 மூடை நெல், வீட்டிலிருந்த பல மின் உபகரணங்கள், ஒரு சலவை இயந்திரம் ஆகியனவும் திருடப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement