• Sep 30 2026

ஊடகவியலாளரை வெளியேற்ற முயற்சி? பருத்தித்துறை சபையில் நடந்தது என்ன?

Chithra / Sep 29th 2026, 3:43 pm
image


பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வின்போது, ஊடகவியலாளர் ஒருவரை சபையிலிருந்து வெளியேற்றுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் முன்வைத்த கோரிக்கையை தவிசாளர் ஏற்க மறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று (29) காலை 9.30 மணியளவில் சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.


அமர்வின் ஆரம்பத்தில், மறைந்தவர்களுக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த கூட்டத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது. இதனையடுத்து, நிதிக்குழு  அறிக்கையும் சபையின் அங்கீகாரத்தைப் பெற்றது.


தொடர்ந்து, சபையின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களுக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதன்படி, சபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய விடயங்களுக்கு அனுமதி வழங்குதல், 2027ஆம் ஆண்டுக்கான சபையின் வருமானம் தரும் மூலங்களை குத்தகைக்கு விடுவதற்கான விளம்பரங்களை வெளியிடுவதற்கான அனுமதி உள்ளிட்ட பல விடயங்களுக்கு சபை அங்கீகாரம் வழங்கியது.


அத்துடன், நகர சபை எல்லைக்குள் நகர சபையினால் வருமானம் பெறப்படும் வர்த்தக நிலையங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு விதிக்கப்படும் திண்மக் கழிவு அகற்றல் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.


திக்க முனை விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துவதற்கு ஒரு நாளுக்கு 5,000 ரூபாய் மற்றும் ஒரு மணித்தியாலத்திற்கு 100 ரூபாய் கட்டணம் அறவிடுவது தொடர்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும், நகர சபை மண்டபத்தை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் வாடகைக்கு வழங்கும்போது 5,000 ரூபாயும், அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் 1,000 ரூபாயும் அறவிடுவதற்கும் சபை அனுமதி வழங்கியது.


இதேவேளை, திக்க முனை பொது விளையாட்டுக் கழகத்திற்கான ஒப்பந்தம் தொடர்பிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்த நிலையில், நகர சபை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் தவறான செய்தியை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர், குறித்த ஊடகவியலாளரின் பெயரைக் குறிப்பிட்டு அவரை சபையிலிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.


இதையடுத்து, சபையில் சில நிமிடங்கள் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.


எனினும், ஊடகவியலாளரை சபையிலிருந்து வெளியேற்றுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தவிசாளர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், குறித்த ஊடகவியலாளர் தொடர்ந்து சபை அமர்வை செய்தி சேகரிப்பதற்காக அவதானிக்க அனுமதிக்கப்பட்டார்.


இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் தொடர்பாக தமிழரசுக் கட்சி உறுப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து அடுத்த சபை அமர்வில் விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.


இதனையடுத்து, பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு நிறைவடைந்தது.

ஊடகவியலாளரை வெளியேற்ற முயற்சி பருத்தித்துறை சபையில் நடந்தது என்ன பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வின்போது, ஊடகவியலாளர் ஒருவரை சபையிலிருந்து வெளியேற்றுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் முன்வைத்த கோரிக்கையை தவிசாளர் ஏற்க மறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று (29) காலை 9.30 மணியளவில் சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.அமர்வின் ஆரம்பத்தில், மறைந்தவர்களுக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த கூட்டத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது. இதனையடுத்து, நிதிக்குழு  அறிக்கையும் சபையின் அங்கீகாரத்தைப் பெற்றது.தொடர்ந்து, சபையின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களுக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதன்படி, சபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய விடயங்களுக்கு அனுமதி வழங்குதல், 2027ஆம் ஆண்டுக்கான சபையின் வருமானம் தரும் மூலங்களை குத்தகைக்கு விடுவதற்கான விளம்பரங்களை வெளியிடுவதற்கான அனுமதி உள்ளிட்ட பல விடயங்களுக்கு சபை அங்கீகாரம் வழங்கியது.அத்துடன், நகர சபை எல்லைக்குள் நகர சபையினால் வருமானம் பெறப்படும் வர்த்தக நிலையங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு விதிக்கப்படும் திண்மக் கழிவு அகற்றல் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.திக்க முனை விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துவதற்கு ஒரு நாளுக்கு 5,000 ரூபாய் மற்றும் ஒரு மணித்தியாலத்திற்கு 100 ரூபாய் கட்டணம் அறவிடுவது தொடர்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், நகர சபை மண்டபத்தை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் வாடகைக்கு வழங்கும்போது 5,000 ரூபாயும், அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் 1,000 ரூபாயும் அறவிடுவதற்கும் சபை அனுமதி வழங்கியது.இதேவேளை, திக்க முனை பொது விளையாட்டுக் கழகத்திற்கான ஒப்பந்தம் தொடர்பிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த நிலையில், நகர சபை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் தவறான செய்தியை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர், குறித்த ஊடகவியலாளரின் பெயரைக் குறிப்பிட்டு அவரை சபையிலிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து, சபையில் சில நிமிடங்கள் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.எனினும், ஊடகவியலாளரை சபையிலிருந்து வெளியேற்றுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தவிசாளர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், குறித்த ஊடகவியலாளர் தொடர்ந்து சபை அமர்வை செய்தி சேகரிப்பதற்காக அவதானிக்க அனுமதிக்கப்பட்டார்.இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் தொடர்பாக தமிழரசுக் கட்சி உறுப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து அடுத்த சபை அமர்வில் விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.இதனையடுத்து, பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement