• Mar 10 2026

அமெரிக்கா - இஸ்ரேலுடனான உறவை அரசு பாதுகாத்துக்கொள்ள வேண்டும்! - சம்பிக்க வலியுறுத்தல்

Chithra / Mar 10th 2026, 9:50 am
image

 

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமையால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான உறவையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மத்திய கிழக்கு நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள தற்போதைய நிலைமை முழு உலகுக்கும் தாக்கம் செலுத்தும். இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.


நெருக்கடிக்குள்ளான ஈரானியர்களை பாதுகாக்க அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் எடுத்த தீர்மானத்தை வரவேற்கிறோம். ஈரான் இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்துள்ளது.


தற்போதைய நெருக்கடியான நிலையில் இலங்கை நடுநிலையான வெளிவிவகார கொள்கையை முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான உறவையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.


கொழும்பில் உள்ள ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய தூதரகங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 


தற்போதைய நெருக்கடியான நிலையில் அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஒரு தரப்பினர் தங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை குறிப்பிடும் போது அது தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றார்.

அமெரிக்கா - இஸ்ரேலுடனான உறவை அரசு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் - சம்பிக்க வலியுறுத்தல்  மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமையால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான உறவையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மத்திய கிழக்கு நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள தற்போதைய நிலைமை முழு உலகுக்கும் தாக்கம் செலுத்தும். இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.நெருக்கடிக்குள்ளான ஈரானியர்களை பாதுகாக்க அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் எடுத்த தீர்மானத்தை வரவேற்கிறோம். ஈரான் இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்துள்ளது.தற்போதைய நெருக்கடியான நிலையில் இலங்கை நடுநிலையான வெளிவிவகார கொள்கையை முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான உறவையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.கொழும்பில் உள்ள ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய தூதரகங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடியான நிலையில் அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஒரு தரப்பினர் தங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை குறிப்பிடும் போது அது தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement