• Mar 11 2026

திடீரென விழுந்து சிதறியஅம்பியூலன்ஸ் விமானம்; பறிபோன 7 உயிர்கள்!

Ziya / Feb 25th 2026, 12:22 pm
image

https://www.facebook.com/share/v/18BhmYTTmH/

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா (Chatra) மாவட்டத்தில், நேற்றிரவு இடம்பெற்ற அம்பியூலன்ஸ் விமானம் (Air Ambulance) விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரெட் பேர்ட் எயார்வேஸ் (Redbird Airways Private Limited) நிறுவனத்திற்குச் சொந்தமான Beechcraft C90 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது

இவ்விமானத்தில் இரு விமானிகள், ஒரு நோயாளி, இரு உதவியாளர்கள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு துணை மருத்துவ உதவியாளர் (Paramedic) என மொத்தம் 7 பேர் பயணித்துள்ளனர்.

41 வயதான நோயாளி சஞ்சய் குமார், விமானிகளான கெப்டன் விவேக் விகாஸ் பகத் மற்றும் கெப்டன் சராஜ்தீப் சிங், விமான உதவியாளர்களான அர்ச்சனா தேவி மற்றும் துருவ் குமார், மருத்துவர் விகாஸ் குமார் குப்தா மற்றும் மருத்துவ உதவியாளர் சச்சின் குமார் மிஸ்ரா ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து ஒன்றில் 63% தீக்காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சஞ்சய் குமாரை, மேலதிக சிகிச்சைக்காக ஜார்க்கண்ட் தலைநகர் ரஞ்சியிலிருந்து டெல்லிக்கு கொண்டு சென்ற போதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.

நேற்று மாலை 7.11 மணிக்கு ரஞ்சியில் இருந்து புறப்பட்ட விமானம், சரியாக 23 நிமிடங்களில் கொல்கத்தா விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பை இழந்தது.

கர்மாட்டட் (Karmatad) அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

விபத்து நடந்த இடம் மிகவும் குன்றும் குழியுமான காட்டுப்பகுதி என்பதால், மீட்பு வாகனங்கள் அங்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்புக் குழுவினர் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டுக்குள் நடந்தே சென்று, விமானத்தின் சிதைவுகளுக்குள் சிக்கியிருந்த சடலங்களை மீட்டனர்.

சடலங்கள் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விமானத்தின் கறுப்புப் பெட்டியை (Black Box) மீட்டெடுத்த பின்னரே விபத்துக்கான துல்லியமான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





திடீரென விழுந்து சிதறியஅம்பியூலன்ஸ் விமானம்; பறிபோன 7 உயிர்கள் https://www.facebook.com/share/v/18BhmYTTmH/இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா (Chatra) மாவட்டத்தில், நேற்றிரவு இடம்பெற்ற அம்பியூலன்ஸ் விமானம் (Air Ambulance) விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ரெட் பேர்ட் எயார்வேஸ் (Redbird Airways Private Limited) நிறுவனத்திற்குச் சொந்தமான Beechcraft C90 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுஇவ்விமானத்தில் இரு விமானிகள், ஒரு நோயாளி, இரு உதவியாளர்கள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு துணை மருத்துவ உதவியாளர் (Paramedic) என மொத்தம் 7 பேர் பயணித்துள்ளனர்.41 வயதான நோயாளி சஞ்சய் குமார், விமானிகளான கெப்டன் விவேக் விகாஸ் பகத் மற்றும் கெப்டன் சராஜ்தீப் சிங், விமான உதவியாளர்களான அர்ச்சனா தேவி மற்றும் துருவ் குமார், மருத்துவர் விகாஸ் குமார் குப்தா மற்றும் மருத்துவ உதவியாளர் சச்சின் குமார் மிஸ்ரா ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.விபத்து ஒன்றில் 63% தீக்காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சஞ்சய் குமாரை, மேலதிக சிகிச்சைக்காக ஜார்க்கண்ட் தலைநகர் ரஞ்சியிலிருந்து டெல்லிக்கு கொண்டு சென்ற போதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.நேற்று மாலை 7.11 மணிக்கு ரஞ்சியில் இருந்து புறப்பட்ட விமானம், சரியாக 23 நிமிடங்களில் கொல்கத்தா விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பை இழந்தது.கர்மாட்டட் (Karmatad) அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.விபத்து நடந்த இடம் மிகவும் குன்றும் குழியுமான காட்டுப்பகுதி என்பதால், மீட்பு வாகனங்கள் அங்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மீட்புக் குழுவினர் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டுக்குள் நடந்தே சென்று, விமானத்தின் சிதைவுகளுக்குள் சிக்கியிருந்த சடலங்களை மீட்டனர்.சடலங்கள் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.விமானத்தின் கறுப்புப் பெட்டியை (Black Box) மீட்டெடுத்த பின்னரே விபத்துக்கான துல்லியமான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement