• Dec 11 2024

மன்னார் மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்- எஸ்.மார்க்கஸ் அடிகளார் வேண்டுகோள்!

Tamil nila / Nov 11th 2024, 10:11 pm
image

மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையை சிறந்த முறையில், நல்ல தலைவர்களை மக்களை மதிக்கின்ற தலைவர்களை தெரிவு செய்ய உங்கள்  வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ்.மார்க்கஸ் அடிகளார் தெரிவித்தார்.

-மன்னார் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்று (11) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

-மன்னார் மாவட்டம் இலங்கையில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக காணப்படுகின்றது.இங்குள்ள மக்களின் எதிர்கால வாழ்க்கை, வாழ்வுரிமை,ஏனைய உரிமைகள் சம்பந்தமான தீர்மானத்தை தீர்மானிக்கக் கூடிய ஒரு தேர்தலாக இப் பாராளுமன்ற தேர்தல் விளங்குகின்றது.

எனவே மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையை சிறந்த முறையில்,நல்ல தலைவர்களை,மக்களை மதிக்கின்ற தலைவர்களை தெரிவு செய்ய உங்கள்  வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

இதற்கு எதிராக செயல்படுகின்ற எந்த ஒரு மனிதர்களோடும் இணைந்து போகாமல் எமது வாழ்வுக்கு துணை நிக்கின்ற அபிவிருத்தியை முன்னெடுக்கின்ற நபர்களுடன் ,தலைவர்களுடன் இணைந்து உழைக்கின்ற ஒரு காலத்தை உருவாக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எனவே உங்கள் வாக்குரிமைகள் நல்ல முறையில் பயன்படுத்துவது உங்கள் ஒவ்வொருவரினதும் மனித உரிமை என்பதை மறந்து விடாதீர்கள் என அவர் தெரிவித்தார்.


மன்னார் மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்- எஸ்.மார்க்கஸ் அடிகளார் வேண்டுகோள் மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையை சிறந்த முறையில், நல்ல தலைவர்களை மக்களை மதிக்கின்ற தலைவர்களை தெரிவு செய்ய உங்கள்  வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ்.மார்க்கஸ் அடிகளார் தெரிவித்தார்.-மன்னார் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்று (11) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,,,-மன்னார் மாவட்டம் இலங்கையில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக காணப்படுகின்றது.இங்குள்ள மக்களின் எதிர்கால வாழ்க்கை, வாழ்வுரிமை,ஏனைய உரிமைகள் சம்பந்தமான தீர்மானத்தை தீர்மானிக்கக் கூடிய ஒரு தேர்தலாக இப் பாராளுமன்ற தேர்தல் விளங்குகின்றது.எனவே மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையை சிறந்த முறையில்,நல்ல தலைவர்களை,மக்களை மதிக்கின்ற தலைவர்களை தெரிவு செய்ய உங்கள்  வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.இதற்கு எதிராக செயல்படுகின்ற எந்த ஒரு மனிதர்களோடும் இணைந்து போகாமல் எமது வாழ்வுக்கு துணை நிக்கின்ற அபிவிருத்தியை முன்னெடுக்கின்ற நபர்களுடன் ,தலைவர்களுடன் இணைந்து உழைக்கின்ற ஒரு காலத்தை உருவாக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.எனவே உங்கள் வாக்குரிமைகள் நல்ல முறையில் பயன்படுத்துவது உங்கள் ஒவ்வொருவரினதும் மனித உரிமை என்பதை மறந்து விடாதீர்கள் என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement