• May 03 2026

ஏயார்பஸ் கொள்முதல் விசாரணை: மஹிந்த ராஜபக்ஷ, பியங்கர ஜயரத்னவிற்கு விசாரணைக்கு அழைப்பு!

Chithra / May 3rd 2026, 12:50 pm
image

சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோருக்கு வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, அவர்கள் இருவரும் வருகின்ற மே 12 ஆம் திகதி கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விசாரணை, ஏயார்பஸ் வானூர்தி கொள்முதல் செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்றது.


2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 06 எயார்பஸ் A-330 ரக விமானங்களையும், 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அப்போதைய ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும், தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏயார்பஸ் கொள்முதல் விசாரணை: மஹிந்த ராஜபக்ஷ, பியங்கர ஜயரத்னவிற்கு விசாரணைக்கு அழைப்பு சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோருக்கு வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, அவர்கள் இருவரும் வருகின்ற மே 12 ஆம் திகதி கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விசாரணை, ஏயார்பஸ் வானூர்தி கொள்முதல் செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்றது.2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 06 எயார்பஸ் A-330 ரக விமானங்களையும், 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அப்போதைய ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும், தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement