• Apr 20 2026

போரின் எதிரொலி; இலங்கையில் 85 இடங்களுக்குப் பலத்த பாதுகாப்பு! பெருமளவு இலங்கையர்கள் ஆபத்தில்!

Chithra / Mar 4th 2026, 7:10 pm
image

இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தியுள்ளார். 


இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இந்து சமுத்திரத்தில், "சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா மூழ்கடித்ததாக ஹெக்செத் தெரிவித்துள்ளார்.


மாறாக அது ஒரு டொர்பிடோ (torpedo) மூலம் மூழ்கடிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.


தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலின் பெயரை ஹெக்செத் குறிப்பிடவில்லை.


ஆனால் முன்னதாக, 'IRIS Dena' கப்பல் இந்து சமுத்திரத்தில் மூழ்கியதாகவும், அதிலிருந்த சுமார் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை கடற்படை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்த 140 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்த ஈரானிய போர்க்கப்பல் விபத்துக்குள்ளானது.


விபத்து நிகழும் போது குறித்த கப்பலில் சுமார் 180 பேர் இருந்துள்ளதுடன், அவர்களில் 32 பேர் காப்பாற்றப்பட்டு தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


'IRIS Dena' என அழைக்கப்படும் இந்தக் கப்பல் இன்று (04) அதிகாலை விபத்துக்குள்ளானதுடன், அச்சந்தர்ப்பத்தில் அக்கப்பல் விடுத்த உதவி கோரிக்கைக்கு அமைய உடனடியாகச் செயற்பட்ட இலங்கை கடற்படையினர் மேற்கண்ட நபர்களைக் காப்பாற்றியுள்ளனர்.


போரின் எதிரொலி; இலங்கையில் 85 இடங்களுக்குப் பலத்த பாதுகாப்பு பெருமளவு இலங்கையர்கள் ஆபத்தில் இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.இந்து சமுத்திரத்தில், "சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா மூழ்கடித்ததாக ஹெக்செத் தெரிவித்துள்ளார்.மாறாக அது ஒரு டொர்பிடோ (torpedo) மூலம் மூழ்கடிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலின் பெயரை ஹெக்செத் குறிப்பிடவில்லை.ஆனால் முன்னதாக, 'IRIS Dena' கப்பல் இந்து சமுத்திரத்தில் மூழ்கியதாகவும், அதிலிருந்த சுமார் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை கடற்படை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்த 140 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்த ஈரானிய போர்க்கப்பல் விபத்துக்குள்ளானது.விபத்து நிகழும் போது குறித்த கப்பலில் சுமார் 180 பேர் இருந்துள்ளதுடன், அவர்களில் 32 பேர் காப்பாற்றப்பட்டு தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.'IRIS Dena' என அழைக்கப்படும் இந்தக் கப்பல் இன்று (04) அதிகாலை விபத்துக்குள்ளானதுடன், அச்சந்தர்ப்பத்தில் அக்கப்பல் விடுத்த உதவி கோரிக்கைக்கு அமைய உடனடியாகச் செயற்பட்ட இலங்கை கடற்படையினர் மேற்கண்ட நபர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement