நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்ட நிலையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.
களுத்துறை, தீனியாவள பகுதியில் வைத்து நேற்று (03) அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்திருந்தது.
மேலும், மதமொன்றை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கில், அவர் பல தடவைகள் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியிருந்த நிலையில், கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பிடியாணைக்கு பின் ஞானசார தேரர் கைது – கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்ட நிலையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.களுத்துறை, தீனியாவள பகுதியில் வைத்து நேற்று (03) அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்திருந்தது.மேலும், மதமொன்றை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கில், அவர் பல தடவைகள் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியிருந்த நிலையில், கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.