வேலணை வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் இன்று (19) தெரிவுசெய்யப்பட்டது.
நீண்ட காலமாக நிர்வாக தெரிவின்றி செயற்பாட்டு முடக்கத்துடன் காணப்பட்டுவந்த குறித்த வர்த்தக சங்கத்தால் நகர்ப்பகுதி வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த விடயம் பிரதேச சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இன்று வர்த்தகர்கள் அழைக்கப்பட்டு குறித்த வர்த்தக சங்கத்தின் கூட்டம் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தின்போது கடந்தகால இழுபறிகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை சீர்செய்யும் பொறிமுறைகள் பல பரிந்துரைக்கப்பட்ட நிலையில் வர்த்தகர் புலேந்திராசா பாலசிறிதரன்
தலைமையிலான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
குறித்த நிர்வாகத்தில் தலைவராக புலேந்திராசா பாலசிறிதரன், செயலாளராக சண்முகராசா சவீதன்,
பொருளாளராக புலேந்திரன் கஜன் உப தலைவராக கந்தசாமி சிவகுமார்,உப செயலாளராக கந்தசாமி கணேசராசாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
நிர்வாக உறுப்பினர்களாக நாகதீபன், பிரதீபன், ஜீவராஜ், வசீகயன் பாஸ்கரன், தனுசன் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட கால இழுபறியின் பின் வேலணை வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு வேலணை வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் இன்று (19) தெரிவுசெய்யப்பட்டது.நீண்ட காலமாக நிர்வாக தெரிவின்றி செயற்பாட்டு முடக்கத்துடன் காணப்பட்டுவந்த குறித்த வர்த்தக சங்கத்தால் நகர்ப்பகுதி வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்திருந்தனர்.இந்நிலையில் குறித்த விடயம் பிரதேச சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இன்று வர்த்தகர்கள் அழைக்கப்பட்டு குறித்த வர்த்தக சங்கத்தின் கூட்டம் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.குறித்த கூட்டத்தின்போது கடந்தகால இழுபறிகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை சீர்செய்யும் பொறிமுறைகள் பல பரிந்துரைக்கப்பட்ட நிலையில் வர்த்தகர் புலேந்திராசா பாலசிறிதரன்தலைமையிலான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.குறித்த நிர்வாகத்தில் தலைவராக புலேந்திராசா பாலசிறிதரன், செயலாளராக சண்முகராசா சவீதன்,பொருளாளராக புலேந்திரன் கஜன் உப தலைவராக கந்தசாமி சிவகுமார்,உப செயலாளராக கந்தசாமி கணேசராசாவும் தெரிவுசெய்யப்பட்டனர். நிர்வாக உறுப்பினர்களாக நாகதீபன், பிரதீபன், ஜீவராஜ், வசீகயன் பாஸ்கரன், தனுசன் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.