போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிசாரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அவ்வாறானவர்களை துரிதமாக இனம் கண்டுகொள்வதற்கான வேலைத்திட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் மதுபானத்துக்கு அடிமையானவர்களாக இனம் காணப்பட்டுள்ள பொலிசாரை ஆரம்ப கட்டமாக பொலிஸ் மருத்துவமனை மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளனர்.
போதைப் பொருள் மற்றும் மதுபானப் பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிசாருக்கு எதிராக ஆரம்பத்தில் திணைக்கள ரீதியான விசாரணைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்பின்னர் அவ்வாறானவர்களை பொலிஸ் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு பொலிஸ் நிலையம் ரீதியாக அவ்வாறானவர்களை இனம் காண்பதற்கான பரிசோதனைககள் முன்னெடுக்கப்படவுள்ளது.
போதைக்கு அடிமையான பொலிசாரை பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிசாரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.அவ்வாறானவர்களை துரிதமாக இனம் கண்டுகொள்வதற்கான வேலைத்திட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் மற்றும் மதுபானத்துக்கு அடிமையானவர்களாக இனம் காணப்பட்டுள்ள பொலிசாரை ஆரம்ப கட்டமாக பொலிஸ் மருத்துவமனை மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளனர்.போதைப் பொருள் மற்றும் மதுபானப் பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிசாருக்கு எதிராக ஆரம்பத்தில் திணைக்கள ரீதியான விசாரணைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.அதன்பின்னர் அவ்வாறானவர்களை பொலிஸ் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு பொலிஸ் நிலையம் ரீதியாக அவ்வாறானவர்களை இனம் காண்பதற்கான பரிசோதனைககள் முன்னெடுக்கப்படவுள்ளது.