• May 06 2025

தெற்கு அதிவேக வீதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை..!

Sharmi / May 5th 2025, 8:37 am
image

கடந்த முதலாம் திகதி தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிவேக வீதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், அதிவேக வீதியில் வாகனங்களை நிறுத்தி வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும், அவசரகாலச் சூழ்நிலையில் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படும்.

எனினும், ஆபத்துக்களை தடுப்பதற்கு, பொலிஸ் உத்தரவுகள், வாகன பழுதடைதல் அல்லது விபத்துகள் உள்ளிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அதிவேக வீதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படுகிறது.

வெலிப்பன அதிவேக வீதியில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை என அதிவேக வீதி செயல்பாடு, பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் மே முதலாம் திகதி நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு வந்த பேருந்துகளின் எண்ணிக்கையும், மே தின கூட்டங்களுக்குப் பின்னர் கொழும்பை விட்டு வெளியேறிய பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால் அவற்றை நிறுத்த முடியவில்லை.

வாகன நிறுத்துமிடத் தேவைகளில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையால், இன்னும் இரண்டு அல்லது மூன்று அதிவேக வீதி சேவைப் பகுதிகள் இருந்தால் நன்மையளிக்கும் என அதிவேக வீதி முகாமைத்துவப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தெற்கு அதிவேக வீதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை. கடந்த முதலாம் திகதி தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிவேக வீதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், அதிவேக வீதியில் வாகனங்களை நிறுத்தி வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும், அவசரகாலச் சூழ்நிலையில் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படும்.எனினும், ஆபத்துக்களை தடுப்பதற்கு, பொலிஸ் உத்தரவுகள், வாகன பழுதடைதல் அல்லது விபத்துகள் உள்ளிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அதிவேக வீதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படுகிறது.வெலிப்பன அதிவேக வீதியில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லை என அதிவேக வீதி செயல்பாடு, பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு காலி முகத்திடலில் மே முதலாம் திகதி நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு வந்த பேருந்துகளின் எண்ணிக்கையும், மே தின கூட்டங்களுக்குப் பின்னர் கொழும்பை விட்டு வெளியேறிய பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால் அவற்றை நிறுத்த முடியவில்லை.வாகன நிறுத்துமிடத் தேவைகளில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையால், இன்னும் இரண்டு அல்லது மூன்று அதிவேக வீதி சேவைப் பகுதிகள் இருந்தால் நன்மையளிக்கும் என அதிவேக வீதி முகாமைத்துவப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement