இலங்கைக்கு 92 ரக பெற்றோலை இறக்குமதி செய்வதற்காக, சிங்கப்பூரின் பிரபல நிறுவனமான எம்.எஸ். எப்டெசா பிடிஈ. எல்டிடி. ( M/s. Epdesa Pte. Ltd) உடன் நீண்டகால ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான வெளியான தகவலின் அடிப்படையில், இந்த ஒப்பந்தமானது 2026.03.15 முதல் 2026.09.14 வரை ஆறு மாத காலப்பகுதியை உள்ளடக்கியது.
இக்காலப்பகுதியில் 300,000 + 5% பேரல்கள் அடங்கிய 05 கப்பல் தொகுதிகளைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகஸ்தர்களிடம்
கோரப்பட்ட விலைமனுக்களில், 06 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தன.
உயர் மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் மதிப்பீட்டின்படி, குறைந்தபட்ச விலையை முன்வைத்த சிங்கப்பூர் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் எதிர்வரும் காலங்களில் நாட்டின் பெற்றோல் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெற்றோல் கொள்வனவு: சிங்கப்பூர் நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் இலங்கைக்கு 92 ரக பெற்றோலை இறக்குமதி செய்வதற்காக, சிங்கப்பூரின் பிரபல நிறுவனமான எம்.எஸ். எப்டெசா பிடிஈ. எல்டிடி. ( M/s. Epdesa Pte. Ltd) உடன் நீண்டகால ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இது தொடர்பான வெளியான தகவலின் அடிப்படையில், இந்த ஒப்பந்தமானது 2026.03.15 முதல் 2026.09.14 வரை ஆறு மாத காலப்பகுதியை உள்ளடக்கியது.இக்காலப்பகுதியில் 300,000 + 5% பேரல்கள் அடங்கிய 05 கப்பல் தொகுதிகளைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகஸ்தர்களிடம் கோரப்பட்ட விலைமனுக்களில், 06 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தன.உயர் மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் மதிப்பீட்டின்படி, குறைந்தபட்ச விலையை முன்வைத்த சிங்கப்பூர் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த நடவடிக்கை மூலம் எதிர்வரும் காலங்களில் நாட்டின் பெற்றோல் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.