• Mar 08 2026

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு - துப்பாக்கிதாரிகளின் வாகன இலக்கத் தகடு கண்டுபிடிப்பு

Chithra / Feb 14th 2026, 3:00 pm
image

 

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில்இ துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற காரின் இலக்கத் தகட்டை கொட்டாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.


நேற்று (13) மாலை 5.20 மணியளவில் அக்குரேகொட பகுதியிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.


காரில் இருந்த 45 வயதான சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது 42 வயதுடைய மனைவி ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


காரில் வந்த இருவர், கீழே இறங்கி டி-56 ரக துப்பாக்கி மற்றும் 9 மில்லிமீற்றர் பிஸ்டல் மூலம் காரின் இருபுறமும் நின்று சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளன.


துப்பாக்கிச்சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற கார் , மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது காரின் இலக்கத் தகடு கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


அந்த இலக்கத் தகட்டை தற்போது கொட்டாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு - துப்பாக்கிதாரிகளின் வாகன இலக்கத் தகடு கண்டுபிடிப்பு  அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில்இ துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற காரின் இலக்கத் தகட்டை கொட்டாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.நேற்று (13) மாலை 5.20 மணியளவில் அக்குரேகொட பகுதியிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.காரில் இருந்த 45 வயதான சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது 42 வயதுடைய மனைவி ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.காரில் வந்த இருவர், கீழே இறங்கி டி-56 ரக துப்பாக்கி மற்றும் 9 மில்லிமீற்றர் பிஸ்டல் மூலம் காரின் இருபுறமும் நின்று சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளன.துப்பாக்கிச்சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற கார் , மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது காரின் இலக்கத் தகடு கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.அந்த இலக்கத் தகட்டை தற்போது கொட்டாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement