• May 23 2026

நடப்பாண்டில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த விபத்துக்கள்

Chithra / Oct 25th 2025, 1:37 pm
image


நாட்டில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான விபத்துச் சம்பவங்களில் 2,239 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

2025 ஜனவரி முதல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

அதன்படி, 2,107 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 2,239 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 4,149 பாரதூரமான விபத்துக்களும் 7,831 சிறு விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

 அத்துடன், 3,295 விபத்துக்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு விபத்து சம்பவங்களால் 58 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துகள் தொடர்பான தகவல்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டதைத் தொடர்ந்து, அவை வெளியிடப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த விபத்துக்கள் நாட்டில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான விபத்துச் சம்பவங்களில் 2,239 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி முதல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, 2,107 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 2,239 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 4,149 பாரதூரமான விபத்துக்களும் 7,831 சிறு விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  அத்துடன், 3,295 விபத்துக்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வவுனியாவில் 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு விபத்து சம்பவங்களால் 58 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்துகள் தொடர்பான தகவல்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டதைத் தொடர்ந்து, அவை வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement