• Apr 20 2026

நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து...! யாழில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Ziya / Jan 20th 2024, 2:57 pm
image

யாழில் நாயொன்று வீதியின் குறுக்கே திடீரென பாய்ந்ததில் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் நாவற்குழி செம்மணி வீதியூடாக மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் திடீரென நாய் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் உயிரிழந்தார்.

சாவகச்சேரி நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 35வயதுடைய  இரண்டு வயது பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து. யாழில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia யாழில் நாயொன்று வீதியின் குறுக்கே திடீரென பாய்ந்ததில் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் நாவற்குழி செம்மணி வீதியூடாக மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் திடீரென நாய் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் உயிரிழந்தார்.சாவகச்சேரி நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 35வயதுடைய  இரண்டு வயது பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement