நிறுவனத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் களுத்துறை - மொரோந்துடுவ, கவடயாவ பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் லுனுவிலாவைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கவடயாவ பகுதியில் உள்ள நிறுவனத்தில் இரண்டு குழுக்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு அதிகரித்த வேளை அங்கு பணிபுரியும் ஒரு ஊழியர் மற்றொருவரை கூர்மையான பொருளால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான குறித்த இளைஞர் கோனதுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மொரோந்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை நிறுவனத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் களுத்துறை - மொரோந்துடுவ, கவடயாவ பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் லுனுவிலாவைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கவடயாவ பகுதியில் உள்ள நிறுவனத்தில் இரண்டு குழுக்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு அதிகரித்த வேளை அங்கு பணிபுரியும் ஒரு ஊழியர் மற்றொருவரை கூர்மையான பொருளால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான குறித்த இளைஞர் கோனதுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மொரோந்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.