• May 24 2026

வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதியினர்; கொடூரமாக கொலை

Chithra / Oct 7th 2025, 8:13 am
image


ஹம்பாந்தோட்டை - ஹூங்கம - வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் சடலங்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. 

ஹூங்கம, ரன்ன, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹூங்கம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் குறித்த தம்பதியினர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். 

எவ்வாறாயினும் தம்பதியினர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதியினர்; கொடூரமாக கொலை ஹம்பாந்தோட்டை - ஹூங்கம - வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் சடலங்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன. ஹூங்கம, ரன்ன, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹூங்கம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் குறித்த தம்பதியினர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். எவ்வாறாயினும் தம்பதியினர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement