• May 26 2025

பெருமளவிலான மருந்துகளை வேனில் கொண்டு சென்ற பெண் கைது!

Chithra / May 25th 2025, 1:10 pm
image

 

சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் வேனில் பெருமளவிலான மருந்துகளை கொண்டு சென்ற 29 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகளை   கொண்டு சென்ற குற்றத்திற்காக பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

தெதுரு-ஓயா வீதிக்கு  அருகில் பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட போது வேனில் பயணித்த குறித்த பெண்ணிடமிருந்து 64 பெட்டிகள் அடங்கிய மருந்துகளை  பொலிஸார் கைப்பற்றினர். 

இந்த வியடம் தொடர்பில் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பெண் வழங்கிய பதில் குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில்  கைது  செய்ததுடன் மருந்துகளையும்  வேனையும் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

பெருமளவிலான மருந்துகளை வேனில் கொண்டு சென்ற பெண் கைது  சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் வேனில் பெருமளவிலான மருந்துகளை கொண்டு சென்ற 29 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகளை   கொண்டு சென்ற குற்றத்திற்காக பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்தெதுரு-ஓயா வீதிக்கு  அருகில் பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட போது வேனில் பயணித்த குறித்த பெண்ணிடமிருந்து 64 பெட்டிகள் அடங்கிய மருந்துகளை  பொலிஸார் கைப்பற்றினர். இந்த வியடம் தொடர்பில் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பெண் வழங்கிய பதில் குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில்  கைது  செய்ததுடன் மருந்துகளையும்  வேனையும் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement