• May 16 2025

பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து – இருவர் காயம்

Chithra / May 16th 2025, 9:26 am
image

 

ஹட்டன் - கொழும்பு பிரதான சாலையில் பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி ஆழத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (16) அதிகாலை 4 மணியளவில் ஹட்டனின் ஸ்ட்ராடன் வத்த பகுதியில் நிகழ்ந்தது.

விபத்தில் கெப் வண்டியின் சாரதியும் கெப் வண்டியில் பயணித்த ஒருவரும் காயமடைந்து வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பகுதியில் பழங்களை வாங்கி கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் கெப் வண்டியில் நான்கு பேர் பயணித்ததாக விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து – இருவர் காயம்  ஹட்டன் - கொழும்பு பிரதான சாலையில் பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி ஆழத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து இன்று (16) அதிகாலை 4 மணியளவில் ஹட்டனின் ஸ்ட்ராடன் வத்த பகுதியில் நிகழ்ந்தது.விபத்தில் கெப் வண்டியின் சாரதியும் கெப் வண்டியில் பயணித்த ஒருவரும் காயமடைந்து வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.ஹட்டன் பகுதியில் பழங்களை வாங்கி கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்து நடந்த நேரத்தில் கெப் வண்டியில் நான்கு பேர் பயணித்ததாக விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement