எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 7,067 தானசாலைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட இதனைத் தெரிவித்தார்.
சுகாதார சீர்கேடுடன் காணப்பட்ட 107 தானசாலைகள், சம்பந்தப்பட்ட இடத்திலேயே சீரமைக்கப்பட்ட பின், அவற்றைத் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டது.
இதுவரை எந்தவொரு தானசாலையும் இயங்குவதற்கு தடை செய்யப்படவில்லை.
குறிப்பாக, தற்காலிக உணவுக் கூடங்கள் மற்றும் எசல மண்டபங்களில் இயங்கும் தானசாலைகள் மீதும் தீவிர கவனம் செலுத்தப்படுகின்றது.
மேலும் தானசாலைகளுக்கான பரிசோதனை நடவடிக்கைகள் இன்றும் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 7,067 தானசாலைகள் பரிசோதனை எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 7,067 தானசாலைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டுள்ளன.பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட இதனைத் தெரிவித்தார்.சுகாதார சீர்கேடுடன் காணப்பட்ட 107 தானசாலைகள், சம்பந்தப்பட்ட இடத்திலேயே சீரமைக்கப்பட்ட பின், அவற்றைத் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டது.இதுவரை எந்தவொரு தானசாலையும் இயங்குவதற்கு தடை செய்யப்படவில்லை. குறிப்பாக, தற்காலிக உணவுக் கூடங்கள் மற்றும் எசல மண்டபங்களில் இயங்கும் தானசாலைகள் மீதும் தீவிர கவனம் செலுத்தப்படுகின்றது.மேலும் தானசாலைகளுக்கான பரிசோதனை நடவடிக்கைகள் இன்றும் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.