• Jun 21 2026

நொடிப்பொழுதில் எரிந்து நாசமான புடவைக்கடை - மட்டக்களப்பில் பரபரப்பு!

shanu / Jun 20th 2026, 10:13 pm
image

மட்டக்களப்பில் கடையொன்றின் மீது திடீரென தீப்பற்றியதில் புடவைக்கடை முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. 


மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில்  உள்ள கடையொன்றின் மீது இன்று(20) சனிக்கிழமை தீப்பிடித்துள்ளது. 


குறித்த கடை உரிமையாளர்  சாப்பாட்டுக்காக கடையை மூடி விட்டு அவரது வீட்டுக்கு சென்ற பின்னர் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.


இப்றாகீம் என்பவருக்கு சொந்தமான இந்த புடவைக் கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. 


இதனால்   பல இலட்சம் ரூபா  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


தீ விபத்தையடுத்து காத்தான்குடி நகர சபை தீ அணைக்கும் வாகனம், மட்டக்களப்பு மாநகர சபை தீ அணைக்கும் வாகனம்  ஸ்தலத்துக்கு விரைந்தது. 


காத்தான்குடி பொலிஸார் , காத்தான்குடி நகர சபை ஊழியர்கள், காத்தான்குடி பொது மக்கள் இளைஞர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டு ஏனைய கடைகள் வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தனர்


சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த காத்தான்குடி  பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் தீ அணைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்றுவருவதுடன் மின் ஒழுக்காக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 


புடவைக்கடை முற்றாக தீயில் எரிந்து நாசமாகிய சம்பவம் அப்பகுதியில் பெம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நொடிப்பொழுதில் எரிந்து நாசமான புடவைக்கடை - மட்டக்களப்பில் பரபரப்பு மட்டக்களப்பில் கடையொன்றின் மீது திடீரென தீப்பற்றியதில் புடவைக்கடை முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில்  உள்ள கடையொன்றின் மீது இன்று(20) சனிக்கிழமை தீப்பிடித்துள்ளது. குறித்த கடை உரிமையாளர்  சாப்பாட்டுக்காக கடையை மூடி விட்டு அவரது வீட்டுக்கு சென்ற பின்னர் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.இப்றாகீம் என்பவருக்கு சொந்தமான இந்த புடவைக் கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. இதனால்   பல இலட்சம் ரூபா  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.தீ விபத்தையடுத்து காத்தான்குடி நகர சபை தீ அணைக்கும் வாகனம், மட்டக்களப்பு மாநகர சபை தீ அணைக்கும் வாகனம்  ஸ்தலத்துக்கு விரைந்தது. காத்தான்குடி பொலிஸார் , காத்தான்குடி நகர சபை ஊழியர்கள், காத்தான்குடி பொது மக்கள் இளைஞர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டு ஏனைய கடைகள் வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தனர்சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த காத்தான்குடி  பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் தீ அணைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்றுவருவதுடன் மின் ஒழுக்காக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். புடவைக்கடை முற்றாக தீயில் எரிந்து நாசமாகிய சம்பவம் அப்பகுதியில் பெம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement