• Aug 12 2025

வானில் இன்று நள்ளிரவு நிகழவுள்ள அதிசயம்; அதிகாலை வரை காணலாம்

Chithra / Aug 12th 2025, 12:02 pm
image


2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று (12) நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை வானில் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர இதனைத் தெரிவித்தார்.

பெர்சீட் விண்மீன் தொகுப்பில் இந்த விண்கல் மழை ஏற்படுவதால் இது "பெர்சீட்" எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

நாளை அதிகாலை 5 மணியளவில் வடக்கு திசையில் இந்த விண்கல் மழை சிறப்பாகக் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விண்கல் மழையின் சிறப்பு, ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம் என்பதாகும். இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும், 

பெர்சீட் விண்மீன் கூட்டம் நள்ளிரவில் அடிவானத்திற்கு மேலே தோன்றத் தொடங்கி, அதிகாலை வரை மேல்நோக்கி நகரும். 

இந்த விண்கல் மழையைப் பார்க்க சிறந்த நேரம் அதிகாலை 5 மணியளவாகும். அப்போது வடக்கே பார்த்தால்இ ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 


வானில் இன்று நள்ளிரவு நிகழவுள்ள அதிசயம்; அதிகாலை வரை காணலாம் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று (12) நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை வானில் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர இதனைத் தெரிவித்தார்.பெர்சீட் விண்மீன் தொகுப்பில் இந்த விண்கல் மழை ஏற்படுவதால் இது "பெர்சீட்" எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்நாளை அதிகாலை 5 மணியளவில் வடக்கு திசையில் இந்த விண்கல் மழை சிறப்பாகக் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த விண்கல் மழையின் சிறப்பு, ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம் என்பதாகும். இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும், பெர்சீட் விண்மீன் கூட்டம் நள்ளிரவில் அடிவானத்திற்கு மேலே தோன்றத் தொடங்கி, அதிகாலை வரை மேல்நோக்கி நகரும். இந்த விண்கல் மழையைப் பார்க்க சிறந்த நேரம் அதிகாலை 5 மணியளவாகும். அப்போது வடக்கே பார்த்தால்இ ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement