• May 17 2026

துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் உயிரிழப்பு...! யாழில் பரபரப்பு...! samugammedia

Ziya / Feb 2nd 2024, 8:41 am
image

யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்தார்.

இச்சம்பத்தில் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி ஆறு மணியளவில் தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்துள்ளார்.

இதன்போது வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலும் சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அதிக மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் உயிரிழப்பு. யாழில் பரபரப்பு. samugammedia யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்தார். இச்சம்பத்தில் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி ஆறு மணியளவில் தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்துள்ளார். இதன்போது வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மேலும் சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அதிக மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement