• May 31 2026

சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் - இளைஞர்களின் அதிரடி நடவடிக்கையில் சிக்கினார்

Chithra / May 30th 2026, 11:36 am
image

 

நுவரேலியா - ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹெட்ட, பகுதியில் பெருந்தோட்டம் ஒன்றில் 11 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  உறுதிப்படுத்தியுள்ளார்.


இச் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேகநபர் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்வதைக் கவனித்த தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், அவரை உடனடியாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹங்குராங்கெத்த பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் - இளைஞர்களின் அதிரடி நடவடிக்கையில் சிக்கினார்  நுவரேலியா - ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹெட்ட, பகுதியில் பெருந்தோட்டம் ஒன்றில் 11 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  உறுதிப்படுத்தியுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்வதைக் கவனித்த தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், அவரை உடனடியாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹங்குராங்கெத்த பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement