• Apr 21 2026

அமைதிக்கான நடைபயணம் - பௌத்த பிக்குகளுடன் வந்திறங்கிய 'அலோகா நாய்'

Chithra / Apr 21st 2026, 9:17 am
image

சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21) காலை இலங்கையை வந்தடைந்தனர். 


இந்த சமாதான நடைபயணத்திற்காக 'ஆலோகா' (Aloka) என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.


உலகெங்கிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ள இந்தச் செல்லப்பிராணியின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் சேவைகளுக்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

சர்வதேச அளவில் புகழ்பெற்ற "Walk For Peace" சமாதான நடைபயணத் திட்டம் இன்று முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமரக் கன்றுடன் இந்த நடைபயணத்தில் பங்கேற்கவுள்ளனர். 


இந்தஅரச மரக் கன்று, மாலை 3:00 மணிக்கு அமைதி நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும்.


பின்னர் ருவன்வெலிசாய வளாகத்தில் மாலை 4:00 மணிக்கு விசேட மத வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.


ஜனாதிபதி செயலகம், 'Clean Sri Lanka' திட்டம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார் மற்றும் தேசிய வடிவமைப்பு மையம் உள்ளிட்ட பெருமளவிலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சமாதான நடைபயணத்திற்கு ஆதரவு வழங்குகின்றன.  

அமைதிக்கான நடைபயணம் - பௌத்த பிக்குகளுடன் வந்திறங்கிய 'அலோகா நாய்' சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21) காலை இலங்கையை வந்தடைந்தனர். இந்த சமாதான நடைபயணத்திற்காக 'ஆலோகா' (Aloka) என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.உலகெங்கிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ள இந்தச் செல்லப்பிராணியின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் சேவைகளுக்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற "Walk For Peace" சமாதான நடைபயணத் திட்டம் இன்று முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமரக் கன்றுடன் இந்த நடைபயணத்தில் பங்கேற்கவுள்ளனர். இந்தஅரச மரக் கன்று, மாலை 3:00 மணிக்கு அமைதி நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும்.பின்னர் ருவன்வெலிசாய வளாகத்தில் மாலை 4:00 மணிக்கு விசேட மத வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.ஜனாதிபதி செயலகம், 'Clean Sri Lanka' திட்டம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார் மற்றும் தேசிய வடிவமைப்பு மையம் உள்ளிட்ட பெருமளவிலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சமாதான நடைபயணத்திற்கு ஆதரவு வழங்குகின்றன.  

Advertisement

Advertisement

Advertisement