• May 21 2026

வெள்ளவத்தையில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

Chithra / Oct 23rd 2025, 9:46 am
image

வெள்ளவத்தை பகுதியில் பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று (22) மாலை பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்ததாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிற காற்சட்டை மற்றும் வெள்ளை மற்றும் நீலநிற சட்டை அணிந்திருந்ததாகவும், சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். 

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

வெள்ளவத்தையில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு வெள்ளவத்தை பகுதியில் பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.நேற்று (22) மாலை பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்ததாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.கருப்பு நிற காற்சட்டை மற்றும் வெள்ளை மற்றும் நீலநிற சட்டை அணிந்திருந்ததாகவும், சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement