• May 24 2026

பாரவூர்தியில் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்; மருத்துவ மாணவன் பரிதாபமாக பலி

Chithra / Sep 30th 2025, 7:57 am
image

கடுகண்ணாவை - கொழும்பு பிரதான வீதியில் ஊராபொல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் அரநாயக்க பகுதியைச் சேர்ந்தவரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவருமான 24 வயதுடைய திவங்க பியதிஸ்ஸ என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்த பல்கலைக்கழக மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போது பாரவூர்தியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து 25 வயதுடைய பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

பாரவூர்தியில் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்; மருத்துவ மாணவன் பரிதாபமாக பலி கடுகண்ணாவை - கொழும்பு பிரதான வீதியில் ஊராபொல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் உயிரிழந்தவர் அரநாயக்க பகுதியைச் சேர்ந்தவரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவருமான 24 வயதுடைய திவங்க பியதிஸ்ஸ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த பல்கலைக்கழக மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போது பாரவூர்தியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து 25 வயதுடைய பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement