• May 25 2026

குடும்பத்தை பராமரிக்க தொழில் முறை திருடனாக மாறிய நபர் - விசித்திரமான சம்பவம்

Thansita / May 29th 2025, 10:02 pm
image

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூன்று மனைவிகள் மற்றும் 9 குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒருவர் தொழில்முறை திருடனாக மாறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் 

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பொலிஸ் நிலையத்தில் ஏராளமான கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிசார் பபாஜான் என்பவரை கைது செய்த நிலையில் .அவரிடம் இருந்து 188 கிராம் தங்க நகைகள், 550 கிராம் வெள்ளி மற்றும் 1500 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். 

பபாஜானை கைது செய்ததன் மூலம் 8 திருட்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், தனக்கு மூன்று மனைவிகள் உள்ளதாகவும், அவர்கள் மூலம் 9 குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்த  குறித்த நபர்  

இவர்கள் அனைவரையும் பார்த்துக் கொள்வதற்காகவும்  அன்றாட வாழ்க்கைப்பிரச்சனையை சமாளிக்கவும் திருட்டுத் தொழில் செய்து  தொழில்முறை திருடனாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரை பராமரிக்க தொழில்முறை திருடனாக ஒருவர் மாறியது பொலிஸாருக்கும் மக்களுக்கும்  வியப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தை பராமரிக்க தொழில் முறை திருடனாக மாறிய நபர் - விசித்திரமான சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூன்று மனைவிகள் மற்றும் 9 குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒருவர் தொழில்முறை திருடனாக மாறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பொலிஸ் நிலையத்தில் ஏராளமான கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிசார் பபாஜான் என்பவரை கைது செய்த நிலையில் .அவரிடம் இருந்து 188 கிராம் தங்க நகைகள், 550 கிராம் வெள்ளி மற்றும் 1500 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். பபாஜானை கைது செய்ததன் மூலம் 8 திருட்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், தனக்கு மூன்று மனைவிகள் உள்ளதாகவும், அவர்கள் மூலம் 9 குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்த  குறித்த நபர்  இவர்கள் அனைவரையும் பார்த்துக் கொள்வதற்காகவும்  அன்றாட வாழ்க்கைப்பிரச்சனையை சமாளிக்கவும் திருட்டுத் தொழில் செய்து  தொழில்முறை திருடனாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பத்தினரை பராமரிக்க தொழில்முறை திருடனாக ஒருவர் மாறியது பொலிஸாருக்கும் மக்களுக்கும்  வியப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement