இதனையடுத்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அறிவித்துள்ள 'கடற்படை முற்றுகை' (Naval Blockade) உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானுக்கு வரும் தளவாடங்கள் மற்றும் அத்தியாவசிய விநியோகங்களைத் தடுத்து நிறுத்துவதன் மூலம், தெஹ்ரானை பேச்சுவார்த்தை மேசையில் பணிய வைப்பதே வாஷிங்டனின் திட்டமாகத் தெரிகிறது.
ஏற்கனவே கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில், தற்போது அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன.
முன்னதாக, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வரும் அனைத்துக் கப்பல்களும் முற்றுகையிடப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஆனால், தற்போது அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள உத்தரவு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிய துறைமுகங்களிலிருந்து புறப்படும் அல்லது அங்கு வரும் கப்பல்களுக்கு மட்டுமே இந்த முற்றுகை பொருந்தும் என சென்ட்காம் கூறியுள்ளது.
ஈரானுக்குச் சுங்கக் கட்டணம் செலுத்தும் கப்பல்கள் விரட்டியடிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், சென்ட்காம் அறிக்கையில் அது குறித்த எந்தக் குறிப்பும் இல்லை.
ஈரானைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்குத் தடையற்ற வழி உண்டு எனக் கூறப்பட்டாலும், களத்தில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்கொள்ள ஈரானும் தயாராகிவிட்டது
இதே வேளை ,அமெரிக்க அதன் ஆதிக்க மனப்பான்மையை கைவிட்டு, ஈரானின் உரிமைகளை மதித்தால் அந்த நாட்டுடன் ஓர் உடன்படிக்கையை நிச்சயமாக காண முடியும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தனது ஏவுகணைத் தளங்களை மீண்டும் உஷார்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச கடற்பரப்பில் இரு நாட்டுப் படைகளும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதால், தற்செயலாக ஒரு போர் வெடிக்கக்கூடும் என உலக நாடுகள் அஞ்சுகின்றன.
அமெரிக்கா-ஈரான் போரில் பாரிய திருப்பு முனை-கடல்வழி முற்றுகையால் ஸ்தம்பித்த உலகம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திரப் போர் இன்று ஒரு மிக ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.உலகமே நம்பிக்கையுடன் எதிர்பார்த்த இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அறிவித்துள்ள 'கடற்படை முற்றுகை' (Naval Blockade) உலக நாடுகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஈரானுக்கு வரும் தளவாடங்கள் மற்றும் அத்தியாவசிய விநியோகங்களைத் தடுத்து நிறுத்துவதன் மூலம், தெஹ்ரானை பேச்சுவார்த்தை மேசையில் பணிய வைப்பதே வாஷிங்டனின் திட்டமாகத் தெரிகிறது.ஏற்கனவே கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில், தற்போது அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன.முன்னதாக, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வரும் அனைத்துக் கப்பல்களும் முற்றுகையிடப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், தற்போது அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள உத்தரவு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரானிய துறைமுகங்களிலிருந்து புறப்படும் அல்லது அங்கு வரும் கப்பல்களுக்கு மட்டுமே இந்த முற்றுகை பொருந்தும் என சென்ட்காம் கூறியுள்ளது.ஈரானுக்குச் சுங்கக் கட்டணம் செலுத்தும் கப்பல்கள் விரட்டியடிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், சென்ட்காம் அறிக்கையில் அது குறித்த எந்தக் குறிப்பும் இல்லை.ஈரானைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்குத் தடையற்ற வழி உண்டு எனக் கூறப்பட்டாலும், களத்தில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்கொள்ள ஈரானும் தயாராகிவிட்டதுஇதே வேளை ,அமெரிக்க அதன் ஆதிக்க மனப்பான்மையை கைவிட்டு, ஈரானின் உரிமைகளை மதித்தால் அந்த நாட்டுடன் ஓர் உடன்படிக்கையை நிச்சயமாக காண முடியும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தனது ஏவுகணைத் தளங்களை மீண்டும் உஷார்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சர்வதேச கடற்பரப்பில் இரு நாட்டுப் படைகளும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதால், தற்செயலாக ஒரு போர் வெடிக்கக்கூடும் என உலக நாடுகள் அஞ்சுகின்றன.