யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் அமைந்துள்ள உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வளாகத்தில் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த பெருக்கு மரம் கடும் மழை காரணமாக சாய்ந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் பாடசாலை சமூகத்தினரையும் பெரும் மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பல ஆண்டுகளாக காணப்பட்ட இந்த பெருக்கு மரம், அப்பகுதியின் அடையாள மரங்களில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது.
பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இதனை பாதுகாத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது யாழ் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக மரம் சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாணத்தில் குறிப்பாக மன்னார் மாவட்டத்திலும் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடும் மழையால் சாய்ந்த பெருக்கு மரம் - கவலையில் உடுப்பிட்டி மக்கள் யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் அமைந்துள்ள உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வளாகத்தில் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த பெருக்கு மரம் கடும் மழை காரணமாக சாய்ந்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் பாடசாலை சமூகத்தினரையும் பெரும் மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் பல ஆண்டுகளாக காணப்பட்ட இந்த பெருக்கு மரம், அப்பகுதியின் அடையாள மரங்களில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இதனை பாதுகாத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.தற்போது யாழ் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக மரம் சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வடமாகாணத்தில் குறிப்பாக மன்னார் மாவட்டத்திலும் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.