சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில், இலங்கை அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை கிண்ணியா அல் அமீன் மகா வித்தியாலய மாணவன் A.M. அபாஸ் பெற்றுள்ளார்.
இந்த மாணவன், 17 வயது பிரிவுக்கான இலங்கை உதைபந்தாட்ட அணியில் விளையாடுவதற்காக அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியா புது டில்லியில் Subroto கிண்ணம் நடைபெற இருக்கிறது.
இச்சுற்றுப் போட்டிக்கான இலங்கை 17 வயது பாடசாலை உதைபந்தாட்ட குழாத்திலேயே இவர் இடம்பிடித்துள்ளார்.
கிண்ணியா அல் அமீன் மகா வித்தியாலயத்திலிருந்து, சர்வதேச போட்டியில் பங்குபற்றும் 4 ஆவது உதைபந்தாட்ட வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் கிண்ணியா மாணவன் சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில், இலங்கை அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை கிண்ணியா அல் அமீன் மகா வித்தியாலய மாணவன் A.M. அபாஸ் பெற்றுள்ளார்.இந்த மாணவன், 17 வயது பிரிவுக்கான இலங்கை உதைபந்தாட்ட அணியில் விளையாடுவதற்காக அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியா புது டில்லியில் Subroto கிண்ணம் நடைபெற இருக்கிறது. இச்சுற்றுப் போட்டிக்கான இலங்கை 17 வயது பாடசாலை உதைபந்தாட்ட குழாத்திலேயே இவர் இடம்பிடித்துள்ளார். கிண்ணியா அல் அமீன் மகா வித்தியாலயத்திலிருந்து, சர்வதேச போட்டியில் பங்குபற்றும் 4 ஆவது உதைபந்தாட்ட வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.